| ADDED : நவ 28, 2025 05:52 AM
சாந்தி நகர்: கர்நாடகாவில் அரசு பஸ்கள் செயல்படும் விதத்தை, டில்லி போக்குவரத்து கழக இயக்குநர் ஜிதேந்திர யாதவ் பாராட்டினார். பெங்களூரு சாந்தி நகரில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று டில்லி போக்குவரத்து கழக இயக்குநர் ஜிதேந்திர யாதவ் வந்தார். கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குநர் அக்ரம் பாஷாவை சந்தித்தார். கர்நாடகாவில் இயங்கும் அரசு பஸ்களின் பராமரிப்பு, போக்குவரத்து ஊழியர்களுக்காக எடுக்கப்பட்ட புதுமையான நடவடிக்கை, பஸ் நிலையங்களில் பின்பற்றப்படும் நடைமுறை, பஸ் புதுப்பித்தல், புதிய தொழில்நுட்பம் போன்றவை குறித்து ஜிதேந்திர யாதவ் கேட்டறிந்தார். இந்த நடைமுறை, தொழில்நுட்பங்களை டில்லி போக்குவரத்து கழகத்தில் பயன்படுத்த போவதாகவும் அவர் கூறினார். மேலும், கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தை பாராட்டினார். இந்த சந்திப்பின் போது, இரு மாநில போக்கு வரத்து அதிகாரிகளும் உடனிருந்தனர். டில்லி போக்குவரத்து கழக இயக்குநர் ஜிதேந்திர யாதவுக்கு, நினைவுப்பரிசு வழங்கிய கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குநர் அக்ரம் பாஷா.