மேலும் செய்திகள்
அமைச்சருடன் சந்திப்பு
2 hour(s) ago
அடுத்தவர் நிலத்தை அபகரித்த 80 வயது மூதாட்டி கைது
3 hour(s) ago
- நமது நிருபர் -: ''கே.பி.எஸ்.சி.,யால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுடன் உரையாட லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பெங்களூரு வர வேண்டும்,'' என மத்திய அமைச்சர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி: கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் நடந்த முறைகேடுகளால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர்களுடன் உரையாடுவதற்காக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பெ ங்களூரு வரவேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டம் நடத்திய ராகுல், கே.பி.எஸ்.சி., தேர்வுகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் துணை நிற்க வேண்டும். பஞ்சாயத்து துறை உதவி பொறியாளர் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளில் பிரியங்க் கார்கேவுக்கு பங்கு உண்டு. நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களும் தெரியும் போது, சொந்த துறையில் நடக்கும் முறைகேடுகள் அவருக்கு எப்படி தெரியாமல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago
3 hour(s) ago