உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  10 ஆண்டில் கசந்து போன காதல்; வேறு பெண்ணை மணந்தவர் கைது

 10 ஆண்டில் கசந்து போன காதல்; வேறு பெண்ணை மணந்தவர் கைது

சிக்கமகளூரு: இளம்பெண்ணை 10 ஆண்டுகளாக காதலித்து விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் கைது செய்யப்பட்டார். சிக்கமகளூரு நகரின், கல்யாண் நகரில் வசிப்பவர் சரத், 29. ஹாசன் மாவட்டம், பேலுாரை சேர்ந்தவர் அஸ்வினி, 26. இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்தனர். உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என, சரத் வாக்குறுதி அளித்தார். இருவரும் சேர்ந்து ஊர் சுற்றினர். அஸ்வினிக்கு நல்ல இடங்களில் இருந்து வரன்கள் வந்தன. ஆனால் சரத் உருக்கமாக பேசி, அஸ்வினியின் மனதை கரைத்து வரன்களை தட்டிக்கழிக்கும்படி செய்தார். இதற்கிடையே சரத், காதலிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். டிசம்பர் 14ம் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அஸ்வினி, திருமண மண்டபத்துக்கு சென்று, தகராறு செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மன்றாடினார். அதை பொருட்படுத்தாத சரத், வேறு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். இதை எதிர்த்த அஸ்வினியை, திருமண மண்டபத்தின் அறைக்குள் அடைத்து வைத்து, சரத், அவரது பெற்றோர், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரும் தாக்கினர். இதனால் மனம் நொந்த அஸ்வினி, சிக்கமகளூரு நகர் போலீஸ் நிலைத்தில் புகார் அளித்தார். முதலில் போலீசார் புகாரை பதிவு செய்யாமல் தாமதித்தனர். அதன்பின் மகளிர் ஆணையத்தில் அஸ்வினி புகார் அளித்தார். இதையடுத்து சரத், அவரது பெற்றோர், மனைவி மற்றும் அவரது பெற்றோர் மீது, போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். நேற்று முன்தினம் சரத் கைது செய்யப்பட்டார். அவரது பெற்றோர், மனைவி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்துகின்றனர். சாட்சி, ஆதாரங்களை போலீசார் சேகரிக்கின்றனர். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவர் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை