உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மலையேற்றத்தின் போது வழி தவறியவர் மீட்பு

மலையேற்றத்தின் போது வழி தவறியவர் மீட்பு

ராம்நகர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் விஸ்வஜித்நாத், 30. இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் பெங்களூரு தெற்கு மாவட்டம், ராம்நகர் தாலுகாவில் உள்ள முத்துராயணசாமி மலையில் நேற்று தனியாக மலையேற்றத்திற்காக சென்றார். மலையேறி கொண்டிருக்கும் போது தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டே சென்றார். அப்போது, அவர் எப்படி மலையின் உச்சியை அடைவதென்று வழி தெரியாமல் விழித்தார். பாறையின் விளிம்பில் நின்றுகொண்டு தவித்த அவர், உடனடியாக அவசர உதவி எண், ‘112’ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த ராம்நகர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். செங்குத்தான பாறை என்பதால் கயிறு கட்டி, தீயணைப்பு துறையினர் ஜாக்கிரதையாக இறங்கினர். வாலிபரை பத்திரமாக மீட்டு மலையின் உச்சிக்கு கொண்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி