உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சாலை விபத்துகளில் பலி அதிகரிப்பு: அமைச்சர் ராமலிங்க ரெட்டி கவலை

சாலை விபத்துகளில் பலி அதிகரிப்பு: அமைச்சர் ராமலிங்க ரெட்டி கவலை

பெங்களூரு: ''மாநிலத்தில் ஆண்டு தோறும், சாலை விபத்துகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார். மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் நவீன் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது: இருசக்கர வாகனம், பஸ், கார், டிராக்டர் உட்பட, மற்ற வாகனங்கள் விபத்துகளால், நாடு முழுதும் 1,25,000 பேர் இறக்கின்றனர். கர்நாடகாவில் 1,000க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். விபத்துகளை கட்டுப்படுத்த நாங்கள், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். போக்குவரத்து விதிகளை மீறுவதும், விபத்துகளுக்கு காரணமாகிறது. இதை கட்டுப்படுத்த அபராதம் விதிப்பது, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் விபத்துகள் குறையவில்லை. பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மது அருந்தி வாகனம் ஓட்டுவோர், வீலிங் செய்வோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாங்கள் எவ்வளவு சட்ட நடவடிக்கைகளை எடுத்தும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாவிட்டால், நாங்கள் என்ன செய்ய முடியும். இம்மாதம் இறுதியில், 175 மின்சார பஸ்கள் வாங்க திட்டமிட்டுள்ளோம். கே.எஸ்.ஆர்.டி.சி., க்கு 100 பஸ்கள், கல்யாண கர்நாடகா போக்குவரத்து கழகத்துக்கு 60, கித்துார் கர்நாடகா போக்குவரத்து கழகத்துக்கு 15 பஸ்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி