உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விவசாயிகளிடம் நெல் மோசடி அரிசி மில் உரிமையாளர் ஓட்டம்

விவசாயிகளிடம் நெல் மோசடி அரிசி மில் உரிமையாளர் ஓட்டம்

தாவணகெரே: தாவணகெரே நகரில், ‘தன்டோதி ரைஸ் மில்’ என்ற பெயரில், சீனிவாஸ் என்பவர் அரிசி ஆலை நடத்துகிறார். இவர், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, அரிசியாக்கி விற்பனை செய்கிறார். ஹாவேரி மாவட்டம், ராணிபென்னுார் தாலுகாவின் ஈலதள்ளி, உத்தகட்டா, பேலுாரு உட்பட பல்வேறு கிராமங்களின் 40க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம், இடைத்தரகர் சித்தப்பா மூலமாக, சீனிவாஸ் நெல் வாங்கியதாக கூறப்படுகிறது. மார்க்கெட் விலையை விட அதிகமான பணம் தருவதாகவும், பணமாகவே தருவதாகவும் உறுதி அளித்தார். இதை நம்பிய விவசாயிகள், லோடு கணக்கில் நெல் விற்றனர். ஆனால் மில் உரிமையாளர் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார். விவசாயிகளுக்கு 1.30 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளார். நெல் பணத்தை கேட்டால், ஆதரவாளர்களை வைத்து மிரட்டுகிறார். இதனால் பொறுமையிழந்த விவசாயிகள், நேற்று முன் தினம் இரவு, தன்டோதி அரிசி ஆலையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் போராட்டத்தை துவக்கியதும், அரிசி ஆலை உரிமையாளர் சீனிவாஸ் தப்பியோடி விட்டார். தங்களுக்கு நியாயம் பெற்று தரும்படி, போலீசாரிடம் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி