உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.55 லட்சம் மதிப்புடைய கோவா மதுபானங்கள் பறிமுதல்

ரூ.55 லட்சம் மதிப்புடைய கோவா மதுபானங்கள் பறிமுதல்

பெலகாவி: மீன்கள் கொண்டு செல்லும் வாகனத்தில், மது கடத்தியதை கலால் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 55.28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கலால் துறை துணை கமிஷனர் மஞ்சுநாத், நேற்று அளித்த பேட்டி: நவம்பர் 14ம் தேதி நள்ளிரவில், பெலகாவி நகரின் எல்லையில், வைபவா ஹோட்டல் முன் பாச்சி சாலையில் கலால் துறை அதிகாரிகள், ஊழியர்கள் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவாவில் இருந்து, கேஏ – 20, ஏஏ – 6449 பதிவு எண் கொண்ட சாக்லேட் நிறம் கொண்ட, ‘டாடா’ சரக்கு வாகனம் வந்தது. துாரத்தில் வரும் போதே, சீருடையில் இருந்த கலால் துறை அதிகாரிகள், ஊழியர்களை பார்த்த சரக்கு வாகன ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி இருளில் தப்பியோடினார். சந்தேகமடைந்த அதிகாரிகள், வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தின் பின் புறம், மீன்கள் கொண்டு செல்ல பயன்படுத்தும் பெட்டிகளுக்கு அடியில், மது பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இதை ஆய்வு செய்த போது 3,024 லிட்டர் மது இருப்பது தெரிந்தது. இவற்றின் மதிப்பு 35.28 லட்சம் ரூபாயாகும். வாகனத்தின் மதிப்பு 20 லட்சம் ரூபாயாகும். கோவாவில் இருந்து கடத்தி வந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. தப்பியோடிய வாகன ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளரை தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ