| ADDED : நவ 15, 2025 08:02 AM
சிக்கபல்லாபூர்: விஷம் கலந்த சாம்பாரை சாப்பிட்டதில் ஒரே குடும்பத்தின் எட்டு பேர் பாதிக்கப்பட்டனர். சிக்கபல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகாவின் தேவரெட்டி கிராமத்தில் தன் குடும்பத்துடன் வசிப்பவர் மத்தரெட்டி. நேற்று முன் தினம் இரவு இவரும், குடும்பத்தினரும் சாம்பார் ஊற்றி சாப்பிட்ட பின் உறங்கினர். சிறிது நேரத்தில் மத்தரெட்டி, பாக்யம்மா, மணி, சுப்ரமணி, மஞ்சுநாத், பானு, ஈஸ்வரம்மா, மத்தக்கா ஆகியோருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் எட்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. முன்விரோதம் காரணமாக, எதிரிகள் மத்தரெட்டியின் வீட்டில், சாம்பாரில் விஷத்தை கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிக்கபல்லாபூர் போலீசார், உணவில் விஷம் கலந்தவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மத்தரெட்டி குடும்பத்தினர் குணமடைந்த பின்னரே, மேலும் விசாரணை தீவிரமடையும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.