உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  உரிகம் ரயில்வே மேம்பாலம் சர்வே பணிகள் துவக்கம்

 உரிகம் ரயில்வே மேம்பாலம் சர்வே பணிகள் துவக்கம்

தங்கவயல்: உரிகம் ரயில் நிலையம் அருகே, ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்காக தங்கச்சுரங்க அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன், கோலார் மாவட்ட உதவி கலெக்டர் ரேணுகா பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். தங்கவயல் நகரின் மையப் பகுதியில் உள்ள ரயில் நிலையம் உரிகம். இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, 30 ஆண்டுகளாக உள்ளது. மேம்பாலம் கட்ட பத்துக்கும் மேற்பட்ட முறை, சர்வே பணிகள் நடந்தன. இங்குள்ள நிலம், தங்கச்சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதால், அதற்கான தொகையை கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின் படி, மாநில அரசு செலுத்தியது. ஆனால் மேம்பாலம் கட்டுமான பணிகளை துவக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று காலையில், கோலார் மாவட்ட உதவி கலெக்டர் ரேணுகா பிரகாஷ், தங்கவயல் தாசில்தார் காயத்ரி, பொதுப்பணித்துறை பொறியாளர் ராஜசேகர், ரயில்வே அதிகாரிகள் ஆகியோருடன் தங்கச் சுரங்க அதிகாரிகளை அழைத்து, மேம்பாலம் கட்டப்பட உள்ள இடத்தில், வரைபடத்துடன் ஆய்வு செய்தனர். மேம்பாலம் கட்டுவதற்கு இடைஞ்சலாக உள்ள கட்டடங்கள், 20 கட்டடங்களாக அதிகரித்துள்ளது எப்படி என உதவி கலெக்டர் கேட்டார். இவை யாவும் ஆக்கிரமிப்புகள் என்று அதிகாரிகள் பதில் அளித்தனர். இது பொதுமக்கள் நலனுக்காக கட்டப்படும் மேம்பாலம். எனவே ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு, நோட்டீஸ் கொடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் சட்ட விரோத கட்டடங்களை அகற்ற, வேண்டுமென உதவி கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்