பெங்களூரு நகரில், ஆங்கில புத்தாண்டை சுமுகமாக கொண்டாடும் வகையில், பெங்களூரு போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: வரும் 31ம் தேதி (நாளை) இரவு 8:00 மணி முதல் ஜனவரி 1ம் தேதி அதிகாலை, 2:00 மணி வரை, அனில் கும்ப்ளே சதுக்கம் - ரெசிடென்சி சாலை; காவேரி எம்போரியம் சந்திப்பு - ஓபரா சந்திப்பு; பிரிகேட் சாலை சந்திப்பு - மியூசியம் சாலை சந்திப்பு; ஆசிர்வாத் சந்திப்பு - மேயோ ஹால் சந்திப்பு; மியூசியம் சாலை - ரெட் ஹவுஸ் சாலை; ரெசிடென்சி கிராஸ் சாலை - ரெசிடென்சி சாலை சந்திப்பு வரை, போலீஸ் வாகனங்கள், அவசர சேவை வாகனங்கள் தவிர, மற்றவாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ரோட்டில் உள்ள அனில் கும்ப்ளே சதுக்கம் - டிரினி ட்டி சதுக்கம்; பிரிகேட் சாலையில் உள்ள காவிரி எம்போரியம் சந்திப்பு - ஓபரா சந்திப்பு; சர்ச் தெருவில் பிரிகேட் ரோடு சந்திப்பு - செயின்ட் மார்க்ஸ் ரோடு சந்திப்பு; ரெசிடென்சி சாலையில் ஆசிர்வாத் சந்திப்பு - மேயோ ஹால் சந்திப்பு வரை, 31ம் தேதி மாலை 4:00 மணி முதல் 1ம் தேதி அதிகாலை 3:00 மணி வரை, வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதல் தளம் குயின்ஸ் சதுக்கத்தில் இருந்து ஹலசூரு நோக்கி எம்.ஜி.சாலை வழியாக செல்லும் வாகனங்கள், அனில் கும்ப்ளே சதுக்கத்தில் இடதுபக்கம் திரும்பி, பி.ஆர்.வி., சந்திப்புக்கு சென்று, அங்கிருந்து வலது பக்கம் திரும்பி கப்பன் சாலையில் சென்று, வெப்ஸ் சந்திப்புக்கு அருகில் மீண்டும் எம்.ஜி.,சாலையில் இணையலாம். எம்.ஜி.ரோட்டிற்கு தங்களது வாகனங்களில் வருவோர், சிவாஜிநகர் பி.எம்.டி.சி., வணிக வளாகத்தின் முதல் தளத்தில் நிறுத்த வேண்டு ம். இதுதவிர யு.பி.சிட்டி, கருடா மால், காமராஜ் சாலையில் உள்ள கப்பன் ரோடு சந்திப்பு முதல் கமர்ஷியல் தெரு சந்திப்பு வரை, வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். மைதானம் கோரமங்களா ஒய்.டி.மத் சாலையில் நடக்கும், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, வரும் 31ம் தேதி இரவு 8:00 மணி முதல் ஜனவரி 1ம் தேதி அதிகாலை, 2:00 மணி வரை, ஒய்.டி.மத் சாலையில் இருந்து சுக் ஷநகரில் உள்ள மைக்ரோ லேண்ட் சந்திப்பு வரை வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோரமங்களா முனிரெட்டி திருமண மண்டபம் எதிரில் உள்ள, ஜி.பி.ஏ., மைதானத்திலும், பெத்தனி பள்ளி அருகில் உள்ள மைதானத்திலும், 60 அடி சாலையிலும் வாகனங்கள் நிறுத்த அனுமதி உள்ளது. பேட்ராயணபுரா மால் ஆப் ஆசியாவில் நடக்கும், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, பேட்ராயணபுரா இணைப்பு சாலையில் கொடிகேஹள்ளி சந்திப்பு முதல் அல்லசந்திரா சந்திப்பு வரை வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ராஜாஜிநகர் ஓரியன் மாலில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, நவ்ரங் சந்திப்பு முதல் சாண்டல் சோப் பேக்டரி வரையும், வெஸ்ட் ஆப் காட் ரோட்டில் ராஜாஜிநகர் 1வது பிளாக் பகுதியிலும் வாகனங்கள் நிறுத்த தடை உள்ளது. பைக் தடை இந்திரா நகரில் 100 அடி சாலை முதல் ஓல்டு மெட்ராஸ் சாலை சந்திப்பு, தொம்லுார் மேம்பால சந்திப்பு ஆகிய இரு இடங்களிலும், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த தடை உள்ளது. இந்திரா நகர் 12வது மெயின் ரோட்டில் உள்ள 80 அடி சாலை முதல் இந்திராநகர் டபுள் ரோடு சந்திப்பு வரையும் வாகனங்கள் நிறுத்த தடை உள்ளது. ஐ.டி.பி.எல்., மெயின் ரோட்டில் பி.நாராயணபுரா ஷெல் பெட்ரோல் பங்கில் இருந்து கருடாச்சார்பாளையா டெக்கலாத்தான் சாலை வரை; ஐ.டி.பி.எல்., சாலையில் மெடி கவர் மருத்துவமனை முதல் பிக் பஜார் சந்திப்பு வரையும் இரு பக்கமும் வாகனங்கள் நிறுத்த தடை உள்ளது. விபத்துகளை தடுக்கும் வகையில், 31ம் தேதி இரவு 11:00 மணி முதல் 1ம் தேதி காலை 6:00 மணி வரை, நகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந் த தடை, விமான நிலையம் செல்லும் மேம்பாலத்திற்கு பொருந்தாது. மேம்பாலங்களில் இரவு பைக்கில் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரை பிடிக்க நகரில், 166 இடங்களில் சோதனை நடத்தப்படும். பைக்கில் சாகசம் செய்யும் 92 இடங்கள அடையாளம் காணப்பட்டு, அந்த இடங்கள் கண்காணிக்கப்படும். நகரில், 50 மேம்பாலங்கள் மூடப்படும். பத்து ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும். 249 கோப்ரா வாகனங்களில் 400 போலீசார் நகரில் இரவு முழுதும் ரோந்து வருவர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
20,000 போலீசார்
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் கூறுகையில், ''புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நகர் முழுதும் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பல இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. ஏ.ஐ., கேமராக்களும் பயன்படுத்தப்படும். பப், உணவகங்கள், பார்களுக்கு நேர வரம்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் ஆபாசமான நடத்தை, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.