உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / பண்டு முதலீட்டுக்கு எதிராக கடன் எஸ்.பி.ஐ., அறிமுகம்

பண்டு முதலீட்டுக்கு எதிராக கடன் எஸ்.பி.ஐ., அறிமுகம்

புதுடில்லி:எஸ்.பி.ஐ., வங்கி, அதன் 'யோனோ' செயலி வாயிலாக, மியூச்சுவல் பண்டு முதலீடுகளுக்கு எதிராக, கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 'கேம்ஸ்' எனும் 'கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்' நிதி தொழில்நுட்ப நிறுவனத்தில் பதிவு செய்துள்ள அனைத்து சொத்து மேலாண்மை நிறுவனங்களின் பண்டு திட்டங்களுக்கு எதிராகவும் கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பண்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர் கள், யோனோ செயலியைப் பயன்படுத்தி, ஆன்லைன் வாயிலாகவே எப்போது வேண்டுமானாலும் கடன் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.பி.ஐ., வங்கி இதேபோன்ற திட்டத்தை, ஏற் கனவே வேறு வடிவத்தில் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்த நபர்களுக்கு மட்டுமே, முதலீட் டுக்கு எதிரான கடன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய திட்டத்தின் வாயிலாக, பிற மியூச்சுவல் பண்டு திட்டங்களுக்கு எதிராகவும் கடன் பெறலாம். அதுவும் ஆன்லைன் வாயிலாகவே இக்கடன்களை எளிதில் பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை