உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடியை இழந்தது எச்.டி.எப்.சி., நிறுவனம்

ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடியை இழந்தது எச்.டி.எப்.சி., நிறுவனம்

மும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி., நேற்று முன்தினம் அதன் மூன்றாம் காலாண்டுக்கான முடிவுகளை வெளியிட்டதை தொடர்ந்து, நேற்று அதன் பங்குகள் 8 சதவீதம் சரிந்தது. மேலும், வங்கி அதன் சந்தை மதிப்பபிலும் 1 லட்சம் கோடி ரூபாயை இழந்தது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது வங்கியின் பங்குகள் 12.70 சதவீதம் சரிந்தது. அதன் பின்னர் இதுவே அதிகபட்ச சரிவாகும்.எச்.டி.எப்.சி., வங்கி, கடந்த ஜூலை மாதம் அதன் தாய் நிறுவனமான எச்.டி.எப்.சி.,யை தன்னுடன் இணைத்துக் கொண்டது.இந்நிலையில், கடந்த டிசம்பர் காலாண்டுக்கான ஒருங்கிணைந்த முடிவுகளை, எச்.டி.எப்.சி., வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது.அதில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம், கடந்த செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் 2.65 சதவீதம் அதிகரித்து, 17,258 கோடி ரூபாய் எனவும், தனிப்பட்ட நிகர லாபம் 2.48 சதவீதம் அதிகரித்து 16,372 கோடி ரூபாயாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பங்குச் சந்தை வர்த்தகர்களுக்கு அதிக உவப்பானதாக இல்லை. இதைத் தொடர்ந்து, நேற்று வர்த்தக நேர முடிவில், மும்பை பங்கு சந்தையில், வங்கியின் பங்கு விலை 8.46 சதவீதம் சரிந்து 1,537 ரூபாயாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் பங்குகள் 8.15 சதவீதம் சரிந்து 1,542 ரூபாயாக இருந்தது. மேலும், வங்கியின் சந்தை மதிப்பும் கிட்டத்தட்ட 1.08 லட்சம் கோடி ரூபாய் சரிந்து, 11.68 லட்சம் கோடி ரூபாய் ஆனது. வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சியில் நிலவும் மந்தநிலை குறித்த கவலை காரணமாகவும் பங்குகள் சரிந்ததாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

முதலிடத்தில் எல்.ஐ.சி.,

எஸ்.பி.ஐ., வங்கியை பின்னுக்குத் தள்ளி, நாட்டிலேயே அதிக சந்தை மதிப்பை கொண்ட பொதுத்துறை நிறுவனம் என்ற நிலையை எட்டியுள்ளது எல்.ஐ.சி., நிறுவனம். கடந்த சில வாரங்களாக எல்.ஐ.சி.,யின் பங்கு விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது நிறுவனம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.நேற்று வர்த்தக நேர தொடக்கத்தில் எஸ்.பி.ஐ.,யின் சந்தை மதிப்பு 5.63 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், எல்.ஐ.சி.,யின் சந்தை மதிப்பு 5.64 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. கடந்த நவம்பர் மாத இறுதியில் எல்.ஐ.சி., அறிமுகப்படுத்திய 'ஜீவன் உத்சவ்' காப்பீட்டுத் திட்டம் காரணமாகவே, அதன் பங்கு விலையும், சந்தை மதிப்பும் அதிகரிக்க துவங்கியுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Bala
ஜன 18, 2024 18:36

தலைப்பை சரியாக சொல்லுங்கள். அது ஒரு லட்சம் கோடி "சந்தை மதிப்பு" ( market cap) . அதுவும் "notional mark-to-market ( MTM) " இழப்பு . பங்கு சந்தை தெரியாத பாமரன் தவறாக புரிந்து கொள்வார்கள். பீதி கிளப்பாதீர்கள்.


SIVAN
ஜன 18, 2024 16:51

என்னை ஒருமுறை jet airways ஏமாற்றினார்கள், கடையை மூடிவிட்டார்கள். அது போல், என்னை ஒரு இட்லி கூட சாப்ப்டிடாமல் 8000 ருபாய் ஏமாற்றினார்கள், நான் அக்கௌன்ட்டை மூடி விட்டேன், HDFC bank எப்போது மூடப்படும் என்று நோக்கிக்கொண்டு இருக்கிறேன்.


ஆரூர் ரங்
ஜன 18, 2024 15:18

HDFC க்கு தனியான உரிமையாளர் யாருமில்லை. சமீப காலத்தில் பங்குகளை அதிக விலைக்கு வாங்கிய முதலீட்டாளர்களுக்கு மட்டுமே இழப்பு. மற்றவர்களுக்கு லாபத்தில் ஒரு பங்கு இழப்பு மட்டுமே????. வங்கிக்கு எவ்வித பண நஷ்டமுமில்லை.


rsudarsan lic
ஜன 18, 2024 12:00

சூதாட்டத்தின் மறுபெயர் இந்திய பங்குசந்தை


R Kay
ஜன 18, 2024 15:20

முதலீடு செய்பவனுக்குத்தானே அந்த கவலையெல்லாம். வாங்க நாம போய் டாஸ்மாக்-ல முதலீடு செய்வோம்.


NicoleThomson
ஜன 18, 2024 08:17

இந்த நட்டத்தை வாடிக்கையாளர் தலையில் சுமத்தி விட்டு செல்லும் இந்த வங்கி , நம்ம சர்வாதிகாரி மாதிரி தான்னு வெச்சுக்கோங்களேன்


rsudarsan lic
ஜன 18, 2024 07:01

சூதாட்டத்திற்கு மற்றொரு வடிவம் பங்குசந்தை


Raj
ஜன 18, 2024 08:23

தெரிஞ்ச விஷயம் தான், ஆனா என்ன பண்றது, அவனவன் கைல கொஞ்சம் காசு வச்சுக்கிட்டு வேலவெட்டி பாக்காம, நோகாம பணம் பாக்க அங்க தானே போறான்?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை