மேலும் செய்திகள்
உலகளாவிய நிறுவனங்களை இந்தியர்களால் உருவாக்க முடியும்
21 hour(s) ago
சீன சோலார் உதிரிபாகம்: வரி விதிக்க விசாரணை
21 hour(s) ago
எண்கள்
21 hour(s) ago
ஜி.எஸ்.டி., புகார் மீது தீர்வு காண குழு
01-Oct-2025
சென்னை:''இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் தான் வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன; அவற்றை அரசுகள் மரியாதையாக நடத்த வேண்டும்,'' என, பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் ஜி.டி.யாதவ் தெரிவித்தார்.சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், 'கிரீன்கோ 2024' மாநாடு, சென்னையில் நேற்று துவங்கியது. இதில், ஆலைகளில் மின்சாரம் போன்றவற்றில் பசுமை தொழில்நுட்ப திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய, பல்வேறு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.சி.ஐ.ஐ., தமிழக தலைவர் ஸ்ரீவத்ஸ்ராம் பேசியதாவது:இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். தொழிற்சாலைகள் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன. எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காமல் உற்பத்தி செய்ய வேண்டும். கார்பனை குறைக்கும் நடவடிக்கையில் தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பசுமை இந்தியாவுக்கு, தொழில் நிறுவனங்கள் துணை நிற்கும்.இவ்வாறு அவர் கூறினார். 'மும்பை இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி'யின் முன்னாள் துணை வேந்தரும், பேராசிரியருமான ஜி.டி.யாதவ் பேசியதாவது:ஒரு தொழிற்சாலை அமைக்கும் போதே, பொருளை உற்பத்தி செய்வது, லாஜிஸ்டிக் என, அனைத்தும் சுற்றுச்சூழலை பாதிக்காத, பசுமை தொழில்நுட்பத்தில் நிலைத்த தன்மையுடன் அமைக்க வேண்டும். நாட்டில் வேலைவாய்ப்பை தொழிற்சாலைகள் தான் உருவாக்குகின்றன. இதனால், தொழில் நிறுவனங்களை அரசு மரியாதையாக நடத்த வேண்டும். இந்தியாவில் திறமையான நபர்கள் பலர் உள்ளனர். வரும், 2047ல் இந்திய பொருளாதாரம், 20 லட்சம் டிரில்லியன் டாலராக உயரும். உலகின் இரண்டாவது பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். பசுமை, நிலைத்தத்தன்மை தொடர்பாக பாடப்பிரிவுகளை மேலும் உருவாக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் படிக்கும் போதே குறைந்த கட்டணத்தில், பயிற்சிகளை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
01-Oct-2025