உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அடுக்குமாடி வீடுகளுக்கான அளவு 32 சதவீதம் அதிகரிப்பு

அடுக்குமாடி வீடுகளுக்கான அளவு 32 சதவீதம் அதிகரிப்பு

மும்பை : நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில், அடுக்குமாடி வீடுகளுக்கான சராசரி அளவு, கடந்த ஐந்தாண்டுகளில் 32 சதவீதம் அதிகரித்து உள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'அனராக்' தெரிவித்துள்ளது. அனராக் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2019ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டின் முதல் அரையாண்டில், டில்லி என்.சி.ஆர்., ஹைதராபாத், பெங்களூரு, கோல்கட்டா, புனே, சென்னை மற்றும் மும்பை மெட்ரோ நகரங்களில், அடுக்குமாடி வீடுகளுக்கான சராசரி அளவு 1,145 சதுர அடியில் இருந்து, 1,513 சதுர அடியாக அதிகரித்து உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு, ஏழு நகரங்களில் சராசரி அளவு 1,420 சதுர அடியாக இருந்த நிலையில், நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 7 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக டில்லி தலைநகர் பகுதியில், கடந்த 2019ல் 1,250 சதுர அடியாக இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கான சராசரி அளவு, 96 சதவீதம் வளர்ச்சியுடன், நடப்பாண்டின் முதல் அரையாண்டில் 2,450 சதுர அடியாக அதிகரித்து உள்ளது. மேலும், குறைந்தபட்சமாக மும்பை மெட்ரோபாலிட்டன் பகுதியில், 2019ல் 784 சதுர அடியாக இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கான அளவு, நடப்பாண்டின் முதல் அரையாண்டில், 5 சதவீதம் வளர்ச்சியுடன், 825 சதுர அடியாக அதிகரித்து உள்ளது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. சென்னையில் அடுக்குமாடி வீடுகளுக்கான சராசரி அளவு 1,145 சதுர அடியில் இருந்து, 1,513 சதுர அடியாக அதிகரித்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ