உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்காவில் ரூ.415 கோடியில் ஆதித்ய பிர்லா உற்பத்தி மையம்

அமெரிக்காவில் ரூ.415 கோடியில் ஆதித்ய பிர்லா உற்பத்தி மையம்

புதுடில்லி:ஆதித்ய பிர்லா குழுமம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 415 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கிறது. இம்மையத்தில் மரத்தினாலான கலைப்பொருட்கள் மற்றும் நுகர்வோர்கள் பயன்படுத்தக்கூடிய பல்வேறு தொழில் துறை பொருட்களை தயாரிப்பதற்கு உதவும் 'எபாக்ஸி ரெசின்'கள் தயாரிக்கப்படும்.இது, அடுத்த 15 முதல் 20 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் எபாக்ஸி வணிகத்தின் சார்பிலான நிறுவனத்தின் நான்காவது விரிவாக்கம் இதுவாகும். முதல்கட்டமாக இங்கு 35 ஏக்கர் பரப்பளவில் இம்மையம் அமைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை