உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆலோசகர்கள் ஏ.ஐ., பயன்படுத்தினால் முதலீட்டாளருக்கு தெரிவிக்க வேண்டும்

ஆலோசகர்கள் ஏ.ஐ., பயன்படுத்தினால் முதலீட்டாளருக்கு தெரிவிக்க வேண்டும்

புதுடில்லி,:செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் ஆய்வாளர்கள், அதன் பயன்பாடு உள்ளிட்ட முக்கிய தகவல்களை, தங்களது வாடிக்கையாளர்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என, 'செபி' தன் ஆலோசனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செபி தெரிவித்து உள்ளதாவது: முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, செயற்கை நுண்ணறிவு சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.எனினும், முதலீட்டாளர்களால் பகிரப்படும் தரவுகள் குறித்து பாதுகாப்பு ரீதியான சிக்கல்கள் ஏற்படக்கூடும். இதனை கருத்தில்கொண்டு, ஏ.ஐ., பயன்படுத்தும் முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் ஆய்வாளர்கள், அதன் பயன்பாடு மற்றும் அது தொடர்பான அனைத்து தகவல்களையும், தங்களது வாடிக்கையாளர்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இது, அவர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு உதவும். இவ்வாறு அதில் தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி