உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டூசன் பாப்கேட் ஆலை விரிவாக்கம்

டூசன் பாப்கேட் ஆலை விரிவாக்கம்

சென்னை:சென்னை கும்மிடிப்பூண்டியில் உள்ள கட்டுமான இயந்திர நிறுவனமான 'டூசன் பாப்கேட்' நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை, 11,300 சதுர மீட்டர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.தற்போது, நிலத்தை தோண்ட பயன்படுத்தப்படும் சிறிய ரக 'எக்ஸ்கவேட்டர்கள்' இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன.இந்த புதிய ஆலை முழுமையான தயாரிப்பு திறனை அடைந்த உடன், 2025ம் ஆண்டு முதல், 'காம்பாக்ட் எக்ஸ்கவேட்டர்'களின் தயாரிப்பு, முழு வீச்சில் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு முதல், சிறிய ரக எக்ஸ்கவேட்டர்களின் ஏற்றுமதியை அதிகரிக்க கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவன ஆண்டு வளர்ச்சி, கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 22 சதவீதமாக உள்ளது. வரும் 2028க்குள், ஆண்டுக்கு 8,900 இயந்திரங்களை விற்பனை செய்ய, இந்நிறுவனம்திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை