உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பசுமை அம்மோனியா ஏற்றுமதி; இந்தியா - ஜப்பான் ஒப்பந்தம்

பசுமை அம்மோனியா ஏற்றுமதி; இந்தியா - ஜப்பான் ஒப்பந்தம்

புதுடில்லி: பசுமை அம்மோனியா ஏற்றுமதி தொடர்பாக, இந்தியா, ஜப்பான் இடையே நேற்று முன்தினம் புதிய ஒப்பந்தம் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்னிலையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ், சோஜிட்ஸ் கார்ப்பரேஷன், குயுஷு எலக்ட்ரிக் பவர் மற்றும் என்.ஒய்.கே. லைன் ஆகிய நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு பசுமை அம்மோனியாவை ஏற்றுமதி செய்ய உள்ளன.'இந்த ஒப்பந்தம், பசுமை எரிசக்தி சந்தையில் இந்தியாவின் முக்கிய பங்கை வலுப்படுத்தியுள்ளது. மேலும், பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளில், மத்திய அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது. இது உலகளாவிய பசுமை எரிசக்தி நிலப்பரப்பில், இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை காட்டுவதாக உள்ளது', என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு பசுமை அம்மோனியா வினியோகம் செய்வதற்கு முதல்முறையாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவில் உற்பத்தியாகும் பசுமை அம்மோனியோ, ஜப்பானில் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 7.5 லட்சம் டன்கள், பசுமை அம்மோனியா ஏற்றுமதி செய்ய டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், 4.5 லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்ய, கூடுதல் டெண்டர்கள் வெளியிடப்பட உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

jayvee
ஆக 25, 2024 11:03

வேதாந்தா நிறுவனத்தை இழுத்துமூடிய சீன கைக்கூலி அரசியல்வாதிகளும், மதமாற்று கும்பல் தலைவர்களும் நீதிமன்றங்களும் இதை மட்டும் எப்படி அனுமதிப்பார்கள் ? இன்று நமது 40% காப்பர் தேவை உள்நாட்டிலிருந்து மீண்டும் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.. இதற்க்கு காரணம் வேதாந்திவிடமிருந்து மாத கூலி, ஒப்பந்த தொழிலாளர் வியாபாரம், இதர முக்கிய வியாபாரங்களில் ஸ்டாக்கிஸ்ட் உட்பட பலவிதங்களில் காசு பார்த்த அரசியல் குண்டாக்கள் ஒரே நாளில் சீன கைக்கூலியாக மாறிய ரகசியம் என்ன ? வருடத்திற்கு ஒரு சொகுசுக்கார் அனுபவிக்க ..வேண்டுமென்றால் அதை கொடுத்துவிட்டு வேறுஒரு கார் என்று பல வருடங்கள் அனுபவித்த அரசியல் தலைவர்களும் இதில் அடக்கம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை