துாத்துக்குடி:துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, சுதந்திர தின உரையில், துறைமுக ஆணையத் தலைவர் சுசந்த குமார் புரோகித் தெரிவித்ததாவது:துறைமுகத்தில், 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளும் வசதியுடன் கூடிய ஒன்பதாவது பொது சரக்கு தளத்தை, சரக்கு பெட்டக முனையமாக மாற்றும் பணி துவங்கிஉள்ளது. மதிப்பாய்வு
மேலும், ஆண்டுக்கு 70 லட்சம் டன் சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக, வடக்கு சரக்கு தளத்தை, முழுமையாக இயந்திரமயமாக்கும் பணியும், மிதவை ஆழத்தை 14.20 மீட்டர் ஆழப்படுத்தும் பணியும் துவங்கப்பட்டுள்ளது.துறைமுகத்தின் கனவு திட்டமான வெளித்துறைமுக திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். அதற்கான மதிப்பாய்வு நடைபெற்று வருகிறது. துறைமுகத்தில், பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்கான திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணிகள் வரும் நவம்பரில் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை ஹைட்ரஜன், அமோனியா, மெத்தனால் சேமிப்பு வசதியை ஏற்படுத்தும் பணி, அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.துாத்துக்குடி துறைமுகத்தில் 7,056 கோடி ரூபாய் மதிப்பில், வெளித்துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல, பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பு ஆலைக்கு 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. எரிபொருள்
காற்றாலை, சூரியஒளி மின்சாரம் வாயிலாக பசுமை ஹைட்ரஜன் தயாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இங்கு தயாரிக்கப்படும் பசுமை ஹைட்ரஜன் கப்பல்கள், இழுவைக் கப்பல்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக, இரண்டு கப்பல்களை 'ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா' மாற்றியமைத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.