மேலும் செய்திகள்
ஸ்மார்ட் போன் விலை ரூ.2,000 வரை உயர்வு
4 hour(s) ago
சேவைகள் துறை வளர்ச்சி சரிவு
4 hour(s) ago
ரூ.50,000 கோடி லாபம் ஈட்டிய பொதுத்துறை வங்கிகள்
4 hour(s) ago
புதிய தாஜ் ஹோட்டல் கட்ட ஒப்பந்தம்
4 hour(s) ago
புதுடில்லி:'கியா இந்தியா' நிறுவனத்தின் வாகனங்களின் விலையை, ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூலப் பொருட்கள் மற்றும் வினியோக தொடர் ஆகியவை தொடர்பான உள்ளீடுகளின் விலை அதிகரிப்பு காரணமாக, இம்முடிவை எடுத்துள்ளதாக கியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் தெரிவித்திருப்பதாவது: கியா இந்தியா நிறுவனம், இந்தாண்டு மேற்கொள்ளும் முதல் விலை மாற்றம் இது. வாடிக்கையாளர்களுக்கு, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்புகளை தொடர்ந்து வழங்க நிறுவனம் செயலாற்றி வருகிறது. இருப்பினும், பொருட்களின் விலையில் தொடர்ச்சியான அதிகரிப்பு, அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் போன்ற காரணங்களால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு இருந்த போதிலும், அதன் பெரும் பகுதியை நிறுவனம் ஏற்றுக் கொண்டு, வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில், குறைந்த அளவிலான விலை உயர்வை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago