உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பான் மசாலா நிறுவனங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி., கட்டுப்பாடு

பான் மசாலா நிறுவனங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி., கட்டுப்பாடு

புதுடில்லி:பேக்கிங் இயந்திரங்கள் குறித்து, ஜி.எஸ்.டி., அமைப்பில் பதிவு செய்யாத பான் மசாலா தயாரிப்பு நிறுவனங்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை, அக். 1 முதல் அமலுக்கு வர உள்ளது.கடந்த ஜனவரியில், மத்திய மறைமுக வரிகள் வாரியம், பேக்கிங் இயந்திரங்கள் பதிவு நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், மத்திய மறைமுக வரிகள் வாரியம், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:புதிய பதிவு நடைமுறையானது பான் மசாலா, குட்கா, மெல்லக்கூடிய புகையிலை, ஜர்தா உள்ளிட்டவற்றின், அனைத்து பிராண்டு மற்றும் பிராண்டு அல்லாத புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும். பேக்கிங் இயந்திரங்கள் குறித்து பதிவு செய்யாத புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, அக். 1 முதல், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி