உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஒன்பது காரட் தங்கத்துக்கு ஹால்மார்க் வழங்க கோரிக்கை

ஒன்பது காரட் தங்கத்துக்கு ஹால்மார்க் வழங்க கோரிக்கை

மும்பை:தங்கம் மற்றும் வெள்ளியின் வரலாறு காணாத விலை உயர்வை அடுத்து, 9 காரட் தங்கத்துக்கும் 'ஹால்மார்க்' முத்திரை மற்றும் தனிப்பட்ட அடையாள எண்களை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை எழுந்துஉள்ளது. தற்போது வரை 14, 18 மற்றும் 22 காரட் தங்கத்துக்கு மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து ஆலோசிப்பதற்காக, ஐ.பி.ஜே.ஏ., எனும் இந்திய தங்கக் கட்டி மற்றும் நகை கடைக்காரர்கள் சங்கம், பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய கழகத்தின் நிர்வாகிகளுடன் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டது. அப்போது, 9 காரட் தங்கத்துக்கும் ஹால்மார்க் சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இது, இப்பிரிவு தங்கத்தில் முதலீடு மேற் கொள்ள, முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். நேற்றைய நிலவரப்படி, 10 கிராம் கொண்ட 9 காரட் தங்கத்தின் விலை 24,070 ரூபாய். இதுபோக, கூடுதலாக 3 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி