உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் இப்போது தான் துவங்கும் கணக்கெடுப்பு

தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் இப்போது தான் துவங்கும் கணக்கெடுப்பு

சென்னை:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்த தொழில் தரவு தளம் உருவாக்கும் பணியை, தமிழக அரசின் பேம்டி.என்., இப்போது தான் துவக்கியுள்ளது.தமிழகத்தில் கிட்டத்தட்ட 62 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. வங்கிகளில் கடன் பெறுவதில் முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட சலுகைகளை பெற உதவும், மத்திய அரசின், 'உத்யம்' இணையதளத்தில், 25.07 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

துவக்கம்

தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்காக, அவற்றின் விபரங்களை உள்ளடக்கிய தமிழக தொழில் தரவு தளத்தை உருவாக்கும் பணியை, பேம் டி.என்., எனப்படும் தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வசதியாக்கல் முகமை துவங்கி உள்ளது. இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் எத்தனை தொழில் நிறுவனங்கள் உள்ளன, அவை எந்த துறையில் இடம்பெறுகின்றன என்பன உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. முதல்கட்டமாக, மின் வாரியத்திடம் இருந்து மின் இணைப்பு பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள் விபரம், ஜி.எஸ்.டி., துறையினரிடமிருந்து பதிவு செய்துள்ள நிறுவனங் களின் தகவல்கள் ஆகியவை பெறப்படுகின்றன. இதேபோல், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் இருந்து, தொழில் நிறுவனங்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், நேரடியாக தொழில் நிறுவனங்களிடமும் விபரங்கள் சேகரிக்கப்படும்.

திட்டம்

இந்த தரவு தளமானது, பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் சேவைகளை இணைக்க உதவும். மேலும், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான சலுகைகள் அடங்கிய புதிய கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றை வகுக்கவும் உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை