உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பெட்ரோல் - எத்தனால் கலப்பால் 24,300 கோடி சேமிப்பு

பெட்ரோல் - எத்தனால் கலப்பால் 24,300 கோடி சேமிப்பு

புதுடில்லி:பெட்ரோல் - எத்தனால் கலவை வாயிலாக, 24,300 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவணியை, 2022 - 23 எத்தனால் ஆண்டில் சேமிக்க முடிந்ததாக, மத்திய பெட்ரொலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து உள்ளார்.கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகள் மற்றும் கார்பன் உமிழ்வுகள் ஆகியவற்றை குறைக்கும் நோக்கில், 'இ - 20' கலவை முறையை அரசு கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தியது. இ - 20 என்பது, பெட்ரொலில் 20 சதவீத எத்தனால் கலப்பதை குறிக்கும். தற்போது 9,300க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில், இ - 20 எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, 24,300 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவணி சேமிக்க முடிந்ததாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 2024 - 25க்குள், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலையும், 2029- - 30க்குள், 30 சதவீதத்தையும் அடைய அரசு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை