உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 7,400 பயனாளிகளுக்கு ரூ.276 கோடி மானியம்

7,400 பயனாளிகளுக்கு ரூ.276 கோடி மானியம்

சென்னை: 'நடப்பு நிதியாண்டில், இதுவரை பல்வேறு திட்டங்களின் வாயிலாக, 7,444 பயனாளிகளுக்கு, 276 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது' என, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார். கூட்டத்தில் அன்பரசன் பேசியதாவது: நடப்பு, 2023 - 24ல், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், 2,278 பேருக்கு சுயதொழில் துவக்க, 25.54 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ், முதல் தலைமுறை தொழில்முனைவோர், 512 பேருக்கு, 71.73 கோடி ரூபாய் மானியமும்; பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 3,899 நபருக்கு, 94.61 கோடி ரூபாய் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.அண்ணல் அம்பேத்கர் திட்டத்தின் கீழ், 755 பயனாளிகளுக்கு, 84 கோடி ரூபாய் என, மொத்தம், 7,444 பயனாளிகளுக்கு, 276 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.தமிழக தொழில் முதலீட்டு கழகம் வாயிலாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, 819 குறு, சிறு நிறுவனங்களுக்கு, 21.67 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில், அதிக பயனாளிகள் தொழில் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ