உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  வர்த்தக மின்வாகன விற்பனை 203 சதவீதம் அதிகரிப்பு பயணியர் கார் விற்பனையும் எகிறியது

 வர்த்தக மின்வாகன விற்பனை 203 சதவீதம் அதிகரிப்பு பயணியர் கார் விற்பனையும் எகிறியது

புதுடில்லி, : நவம்பர் மாத மின்சார வாகன விற்பனை அறிக்கையை வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த மாதத்தில், மின்சார வாகன விற்பனை, 12.47 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 1.93 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு நவம்பரில் 2.17 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மின்சார வாகன சந்தையில், 50 சதவீதத்திற்கு அதிகமான பங்கு வகிக்கும், இருசக்கர வாகனங்களின் விற்பனை, 2.51 சதவீதம் குறைந்தது. மின்சார மூன்று சக்கர வாகன விற்பனை, 32 சதவீதமும், மின்சார பயணியர் கார் விற்பனை, 62 சதவீதமும், மின்சார வர்த்தக வாகன விற்பனை 203 சதவீதமும் உயர்ந்துள்ளன. மின்சார பயணியர் கார் விற்பனையில், டாடா நிறுவனம் முதல் இடத்திலும், எம்.ஜி., மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதில், மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, 408 சதவீதமாக அதிகரித்துள்ளது. மின்சார இருசக்கர வாகன விற்பனையில், டி.வி.எஸ்., நிறுவனம் முதல் இடத்தில் நீடிக்கிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில், பஜாஜ் மற்றும் ஏத்தர் நிறுவனங்கள் உள்ளன. ஓலா நிறுவனத்தின் விற்பனை, 71 சதவீதம் சரிந்து, ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மின் வாகன வகை நவ 2024 நவ 2025 வளர்ச்சி இருசக்கர வாகனம் 1,19,998 1,16,982 2.51 (குறைவு) 3 சக்கர வாகனம் 63,400 83,683 31.99 பயணியர் கார் 9,174 14,850 61.87 வர்த்தக வாகனம் 561 1,698 202.7 மொத்தம் 1,93,133 2,17,213 12.47


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி