உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சேமிப்பு கிடங்குகள் தேவை முக்கிய நகரங்களில் 5% சரிவு

சேமிப்பு கிடங்குகள் தேவை முக்கிய நகரங்களில் 5% சரிவு

புதுடில்லி:கடந்த ஆண்டு, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், சேமிப்பு கிடங்குகளுக்கான தேவை, 5 சதவீதம் குறைந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'வெஸ்டியன்' தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:தென்னிந்தியாவின் மூன்று முக்கிய நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில், சேமிப்பு கிடங்குகளை குத்தகைக்கு விடுவது, தேவை குறைவு காரணமாக, கடந்த ஆண்டு 5 சதவீதம் சரிந்து, 1.02 கோடி சதுர அடியாக இருந்தது. கடந்த 2022ம் ஆண்டில், இம்மூன்று நகரங்களில், கிடங்குகளுக்கான மொத்த குத்தகை 1.07 கோடி சதுர அடியாக இருந்தது. சேமிப்பு கிடங்குகளுக்கான குத்தகையில், மூன்றாம் தரப்பு சரக்கு கையாளுகை நிறுவனங்கள், பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் முக்கிய பங்கு வகித்தன. இவ்வாறு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ