உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உணவு பதப்படுத்தும் தொழில் கடன்: தமிழகத்தில் 10,000 பேர் பயன்

உணவு பதப்படுத்தும் தொழில் கடன்: தமிழகத்தில் 10,000 பேர் பயன்

சென்னை: தமிழகத்தில், பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் கடன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை, 10,000ஐ தாண்டியது. அதில், 8,588 நபருக்கு, 434 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கப்பட்டுள்ளதுமத்திய அரசு, உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை துவக்கியுள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக தமிழக தொழில் துறையின் கீழ் இயங்கும் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது.பிரதமரின் திட்டத்தின் கீழ், மசாலா வகைகள், ஊட்டச்சத்து மாவு போன்ற உணவு பொருட்களை தயாரிக்க தனிநபர், விவசாயிகள், சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.தமிழகத்தில், 2021ல் இருந்து அடுத்த ஆண்டிற்குள், 12,128 குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை, கடன் வழங்கும் பயனாளிகள் எண்ணிக்கை, 10,000ஐ தாண்டி, 10,124ஆக உள்ளது. அவர்களுக்கு, 599 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அதில், 8,588 நபருக்கு, 434 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, உணவு பதப்படுத்தும் திட்டத்தின் மாநில முதன்மை திட்ட அலுவலர் நந்தகுமார் கூறுகையில், ''மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ''இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளை தொழில்முனைவோராகவும், ஏற்றுமதியாளராகவும் மாற்ற, அரசு முழு வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. பலரும் உணவு பதப்படுத்தும் தொழில் துவங்க ஆர்வம் காட்டுகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை