உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தங்க நகை ஏற்றுமதி 8% சரிந்தது

தங்க நகை ஏற்றுமதி 8% சரிந்தது

புதுடில்லி:நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை ஏற்றுமதி, கடந்த டிசம்பரில், 8.14 சதவீதம் சரிந்துள்ளதாக, நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துஉள்ளது.இவற்றின் மொத்த ஏற்றுமதி கடந்த 2022 டிசம்பரில், 19,901 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 18,281 கோடி ரூபாயாக சரிந்து உள்ளது.முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் இருந்த குறைவான தேவை, புவிசார் அரசியல் சூழல் மற்றும் இந்தியா உட்பட 60 நாடுகள் நடப்பாண்டில் தேர்தல் எதிர்கொள்வது போன்ற காரணங்கள், இவற்றின் ஏற்றுமதியை பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி