உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஐ.ஐ.டி., - டிக் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐ.ஐ.டி., - டிக் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை:தமிழக அரசின், 'டிக்' எனப்படும் தொழில் முதலீட்டு கழகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 5 லட்சம் ரூபாய் முதல், 41 கோடி ரூபாய் வரை கடன்களை வழங்குகிறது.இதற்கு மானிய சலுகைகளும் வழங்குகிறது. கடன் வழங்குவதுடன் மட்டுமின்றி, தொழில் துவங்குவதற்கான ஆலோசனைகளையும், அரசு துறைகளின் அனுமதிகளை பெற்று தரும் பணியையும் டிக் செய்கிறது. தொழில் நிறுவனங்களுக்கு, மின் கட்டணம் அதிக செலவை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் டிக், ஐ.ஐ.டி., மெட்ராஸ் உடன் இம்மாதம், 3ம் தேதி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.இதன் வாயிலாக, டிக் நிறுவனத்தில் கடன் வாங்கிய தொழில் நிறுவனங்கள், தங்களின் மின் கட்டண செலவை குறைக்கும் வகையில், ஆலைகளில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த என்னென்ன வழிமுறை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை, ஐ.ஐ.டி., மெட்ராஸ் வழங்கும்.தொழிற்சாலைகள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை