உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  தேசிய பருத்தி கொள்கையில் ஜவுளி துறைக்கு ரூ.1,100 கோடி

 தேசிய பருத்தி கொள்கையில் ஜவுளி துறைக்கு ரூ.1,100 கோடி

புதுடில்லி, :மத்திய ஜவுளி அமைச்சகம், ஜவுளித்துறை மேம்பாட்டுக்காக 1,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது. பருத்தி உற்பத்தி இயக்கம் திட்டத்தின் மொத்த ஒதுக்கீடான 6,000 கோடி ரூபாயில் இருந்து இது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இது, மொத்த ஒதுக்கீட்டில் 22 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஐந்தாண்டு திட்டமாக பருத்தி உற்பத்தி இயக்கம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் பருத்தி உற்பத்தி துறையை மீட்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஒதுக்கப்பட்ட தொகையை பயன்படுத்தி, பஞ்சாலைகளை நவீனப்படுத்துதல், பஞ்சின் தரத்தை மேம்படுத்துதல், விளைநிலத்தில் தொடங்கி துணியாக உருவெடுக்கும்வரை பருத்தியின் படிநிலைகளை மேலும் பலப்படுத்துதல், ஆகியவை மேற்கொள்ளப்படும். நாட்டின் பஞ்சு உற்பத்தி, தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 2023 - -24ல் 3.20 கோடி பேல்களாக இருந்த உற்பத்தி, 2025- - 26ல் 2.90 கோடி பேல்களாக குறைந்திருக்கிறது. அதேபோல், நான்கு ஆண்டுகளில் பருத்தி உற்பத்தி நிலப்பரப்பு 20 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது. * மத்திய அமைச் சரவையின் ஒப்புதலுக்குப்பிறகு நிதி கிடைக்கும் * ஜின்னிங் தொழிற்சாலைகள் நவீனப் படுத்தப்படும் * பஞ்சின் தரம் உயர்த்தப்பட்டு, விவசாயிகளின் பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும் * திட்ட கால அளவு 10 ஆண்டுகளாக உயர வாய்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை