உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்வு

வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்வு

புதுடில்லி:கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்து, 7.78 கோடியாக உள்ளது என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த நிதியாண்டில், நாட்டில் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 7.78 கோடியாக இருந்தது. இது கடந்த 2013 - 14 நிதியாண்டில் இருந்த 3.80 கோடியுடன் ஒப்பிடுகையில், 104.91 சதவீதம் அதிகமாகும்.இந்த காலகட்டத்தில் நிகர வரி வருவாயும் 160.52 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2013 - 14 நிதிஆண்டில் 6.39 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிகர வரி வருவாய், கடந்த நிதியாண்டில் 16.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 2014ம் நிதியாண்டில் 7.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மொத்த வரி வருவாய், கடந்த 2023ம் நிதியாண்டில் 19.72 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேசமயம் வரிக்கும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் 5.62 சதவீதத்திலிருந்து 6.11 சதவீதமாக உயர்ந்து உள்ளது.மத்திய அரசு நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வருவாயாக 18.23 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்ய, பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் தனிநபர் வரி மற்றும் கார்ப்பரேட் வரியும் அடங்கும். இது, கடந்த நிதியாண்டின் 16.61 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், 9.75 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு தெரிவித்துஉள்ளது.வரிக்கும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் 5.62 சதவீதத்திலிருந்து 6.11 சதவீதமாக உயர்ந்துள்ளது

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடி வரி விதிப்பின் பங்களிப்பு (சதவீதத்தில்)

நிதியாண்டு சதவீதம்2001 3.252008 6.302014 5.622021 4.782023 6.11


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

g.s,rajan
ஜன 25, 2024 20:49

இந்தியாவில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் பேர் அரசுக்கு வருமான வரி செலுத்த வேண்டும் அப்ப்போதுதான் இந்தியா எல்லாவற்றிலும் நன்கு முன்னேறும் .


g.s,rajan
ஜன 25, 2024 14:20

Gud,the Income Tax Paying Percentage in India should come to above 90 Percent.


A.Gomathinayagam
ஜன 25, 2024 14:02

வருமான வரி செலுத்தும் உச்ச வரம்பை உயர்த்தாததாலேயே அதிகம் மக்கள் வருமான வரி எல்லை க்குள் வருகிறார்கள்


ஆரூர் ரங்
ஜன 25, 2024 16:24

தவறு.???? 2 லட்சமாக இருந்த வரிவிலக்கு 3 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. 80C வரி விலக்கு ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சமாக ஆக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வரி வகிதமும் 10 லிருந்து 5 சதவீதமாக்கப்பட்டுள்ளது. வரியேய்ப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதால்தான் அதிகம் பேர் வருமான வரி வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு வரி வசூல் 160 சதவீதம் உயர்ந்துள்ளது.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி