உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆயத்த ஆடை வர்த்தகம் அபாரம் ரூ.35,861 கோடிக்கு ஏற்றுமதி  

ஆயத்த ஆடை வர்த்தகம் அபாரம் ரூ.35,861 கோடிக்கு ஏற்றுமதி  

திருப்பூர்: சாதகமான சூழல் நிலவுவதால், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி, முதல் காலாண்டில் 35,861 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.சீனா, வங்கதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழல், இந்தியாவுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கிஉள்ளது. இதன் காரணமாக, பல மாதங்கள் சரிந்து போயிருந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, 2024 பிப்., மாதத்தில் இருந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.இது குறித்து, ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் கூறுகையில், ''கடந்த, 17 மாதங்களாக, இப்பிரிவில் ஏற்றுமதி, படிப்படியாக அதிகரித்து வருகிறது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, திருப்பூரின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.இதன் வாயிலாக, நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் அதிகரிக்கும். திறன் மேம்பாடு, சந்தை நுண்ணறிவு போன்ற முயற்சியால், ஆயத்த ஆடை ஏற்றுமதி வேகமாக முன்னேறி வருகிறது,'' என்றார்.https://x.com/dinamalarweb/status/1945644670270542302


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை