மேலும் செய்திகள்
பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்
11 hour(s) ago
துளிகள்
11 hour(s) ago
ஆபரண கற்கள் ஏற்றுமதி 20சதவிகதம் அதிகரிப்பு
11 hour(s) ago
மும்பை: மும்பையில் கடந்த 6ம் தேதி தொடங்கி, மூன்று நாட்கள் நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கியின் பண கொள்கை கூட்டம் நேற்று நிறைவுபெற்றது. இதையடுத்து கூட்டத்தின் இறுதியில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடனுக்கான 'ரெப்போ' வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தொடர்ந்து 6.50 சதவீத வட்டியே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்புகள்: வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம், 6.50 சதவீதமாக தொடரும் நடப்பு நிதியாண்டில், 7.30 சதவீதமாக உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.40 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் இது 4.50 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது இணைய தொடர்பு முழுமையாக கிடைக்காத இடங்களில், சில்லரை பரிவர்த்தனைகளில் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த, அதன் ஆப்லைன் வடிவம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது தற்போதைய பொருளாதார உத்வேகம் அடுத்த நிதியாண்டிலும் தொடரக்கூடும் ராபி பருவ விதைப்பில் மீட்சி, உற்பத்தியில் நீடித்த லாபம், சேவைகள் துறையின் மீளும் திறன் ஆகியவை, வரும் நிதியாண்டில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் முதலீடு அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக தனியார் துறையின் மூலதன செலவீனம் மறுமலர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன நாட்டின் பொருளாதாரம் வலுவான, நீடித்த வளர்ச்சிப் பாதையில் நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது கிராமப்புற தேவைகள் அதிகரிக்க துவங்கியுள்ளன; நகர்ப்புற நுகர்வு தொடர்ந்து வலுவாகவே உள்ளது அரசு நிதி ஒருங்கிணைப்பு பாதையை பின்பற்றுகிறது. உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளும் வலுவாகவே உள்ளன உணவு பொருட்களின் விலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை பணவீக்கத்தை தொடர்ந்து பாதிக்கிறது அதிகரித்து வரும் பதற்றமான புவிசார் அரசியல் சூழல் காரணமாக வினியோக சங்கிலி பாதிப்பு அடைந்து, பொருட்களின் விலை அதிகரிக்கிறது அன்னிய செலாவணி கையிருப்பு, 51.66 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. நாட்டின் நிதித்துறை ஆரோக்கியமான இருப்பு நிலையுடன் வலுவாகவே உள்ளது இணக்கம், நுகர்வோர் நலன் பாதுகாப்பு ஆகிய வற்றுக்கு நிறுவனங்கள் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் நடப்பு நிதியாண்டில் இந்திய ரூபாயின் மாற்று விகிதம் நிலையானதாகவே இருந்தது அடுத்த பணக் கொள்கை குழுக் கூட்டம், ஏப்ரல் 3 முதல் 5ம் தேதி வரை நடைபெறும்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago