மேலும் செய்திகள்
புதுக்கோட்டை டைடல் பார்க் பணிக்கு டெண்டர்
1 hour(s) ago
தங்கம், வெள்ளி, பங்குச் சந்தை, ஐ.பி.ஓ., வீடு, மனை, பிக்சட் டிபாசிட் என எதில் முதலீடு செய்வது லாபம் தரும் என்பதை அறிவதில் மக்கள் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. 'எது நமக்கான லாபகரமான முதலீடு?' என்பது குறித்த குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், 'மேஜிக் 20 தமிழ்' நிறுவனம் 'மேஜிக் மனி டி.என். சம்மிட்- 2026'என்ற கருத்தரங்கை வரும் 29ம் தேதி சென்னையில் நடத்த உள்ளது. முதலீடு மற்றும் நிதித் துறையில் தற்போது நிலவும் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் தளமாக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஒரு முதலீட்டாளர் எந்தப் பாதையில் செல்ல வேண்டும்; எதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை வழங்கவே இந்த கருத்தரங்கம். கருத்தரங்கில், '2026ல் முதலீட்டு சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?' என்பது குறித்து நிபுணர்களின் அமர்வு நடைபெறுகிறது. இதில், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நிஜமான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும். 'சுந்தரம் மியூச்சுவல் பண்டு' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராதாகிருஷ்ணன், எம் டூ பி., பின்டெக் நிறுவனர் பிரபு, ஐதாட் நிறுவனர் ஷியாம் சேகர், கோயம்புத்துார் கேபிட்டல் இயக்குநர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன், பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன், ப்ராங்க்ளின் டெம்பிள்டன் துணைத்தலைவர் கே.ராஜஸா, 'பஜாஜ் ஆல்டர்நேட்ஸ்' லஷ்மி அய்யர், 'சிக்மா' நிறுவனர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பல நிபுணர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
1 hour(s) ago