உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / முதலீட்டு மேலாண்மை சேவைகள் அசுர வளர்ச்சி ஆபத்தானதா?

முதலீட்டு மேலாண்மை சேவைகள் அசுர வளர்ச்சி ஆபத்தானதா?

கடந்த 10 ஆண்டுகளில், நம் நாட்டில் முதலீட்டு மேலாண்மை சேவைகள் துறை பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. செபி ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்தியது, தொழில்நுட்ப செலவுகளைக் குறைத்தது உள்ளிட்ட காரணங்களால், பி.எம்.எஸ்., எனும் 'போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ்' மற்றும் ஏ.ஐ.எப்., எனும் 'ஆல்ட்டர்னேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் பண்டு'கள் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு 'ஆம்பி' ஏற்படுத்திய விழிப்புணர்வு பிரசாரமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. அதேநேரம் இந்த அபரிமிதமான வளர்ச்சி, ஆரோக்கியமானதா அல்லது ஆபத்தானதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

வளர்ச்சிக்கான காரணங்கள்

* ஏ.ஐ.எப்., மற்றும் பி.எம்.எஸ்., போன்றவை பெரும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே என்ற நிலையில் மாற்றம்.* 2020-2021 காளைச் சந்தை கொடுத்த தைரியம்.* வாய்ப்பை தவறவிட்டு விடுவோமோ என்ற பயம்.Gallery

ரிஸ்க்குகள்

* போட்டி அதிகரிப்பால், கட்டணத்தை குறைத்து, தரமற்ற சேவையை வழங்கும் அபாயம். * சந்தையின் இறங்குமுகத்தை எதிர்கொள்ளாத புதிய மேலாளர்களால், தாக்குப் பிடிக்க முடியுமா என்பது குறித்த சந்தேகம். * ஏராளமான ரிசர்ச் அறிக்கைகள் வருவதால், திட்டங்களை தேர்வு செய்வதில் முதலீட்டாளர்களுக்கு குழப்பம்.

என்ன நடக்கலாம்?

* சந்தை வீழ்ச்சியின்போது, தரமான முதலீட்டு மேலாண்மை நிறுவனங்கள் மட்டுமே இருக்கும். * நுழைவு தடைகளை செபி கடுமையாக்க வாய்ப்பு; தரக்கட்டுப்பாட்டை வலுப்படுத்தக்கூடும்.

என்ன செய்வது?

* முதலீட்டாளர்கள் விளம்பரங்களை நம்பாமல், ரிஸ்க் மேலாண்மையை கவனிக்க வேண்டும்

இது என்ன?

பி.எம்.எஸ்.,

* அதிக செல்வம் படைத்தவர்களின் முதலீடுகளை, அவர்களின் இடர் தாங்கும் திறனுக்கேற்ப நிபுணர்கள் நிர்வகிக்கும் சேவையாகும். * இதில் முதலீடு, மியூச்சுவல் பண்டுகளைப் போலச் சேர்க்கப்படாமல், வாடிக்கையாளரின் பெயரிலேயே தனிப்பட்ட முறையில் கையாளப்படும்.

ஏ.ஐ.எப்.,

* முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைப் பொதுவில் திரட்டி, வழக்கமானவற்றில் அல்லாமல் பிரைவேட் ஈக்விட்டி மற்றும் வெஞ்சர் கேப்பிட்டல் போன்ற பிற இனங்களில் முதலீடு செய்யப்படும். * இது பொதுவாக அதிக முதலீட்டுத் தொகையையும், நீண்ட லாக்-இன் காலத்தையும் கொண்டு, சிக்கலான உத்திகளைப் பயன்படுத்தி, அதிக வருமானத்தை ஈட்டும் வகையிலான இலக்கு கொண்டதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை