போர்ட்போலியோவை மாற்ற புதிய விதி பி.எம்.எஸ்., நிறுவனங்களுக்கு கடிவாளம்
பி.எம்.எஸ்., எனப்படும் போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் சேவை வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய வாடிக்கையாளர்களின் போர்ட்போலியோக்களை மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றித் தருவதற்கான வழிமுறைகளை, செபி அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறையின்படி, போர்ட்போலியோவை மாற்ற நினைக்கும் மேலாளர்கள், செபியிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மேலாண்மை குழுவிற்குள் போர்ட்போலியோ சேவைகளை மாற்றலாம் அல்லது சில முதலீட்டு அணுகுமுறைகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம் என செபி தெரிவித்து உள்ளது. முழு வணிகத்தையும் மாற்றினால், 45 வேலை நாட்களுக்குள் போர்ட்போலியோ பதிவை ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. வெவ்வேறு குழுக்களுக்குள் என்றால், முழு போர்ட்போலியோ சேவை வணிகத்தை மட்டுமே மாற்ற முடியும் என்றும்; பகுதியளவு பரிமாற்றம் அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு
என்ன பலன் 
 செபியின் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்பதால், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு  முதலீட்டாளர்களின் போர்ட்போலியோ தொடர்ந்து எவ்வித இடையூறுகளும் இல்லாமல் நிர்வகிக்கப்படும்  புதிய நிறுவனம் சட்ட ரீதியான எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வது  வணிகம் அல்லது திட்டங்களின் நிர்வாகம் கைமாறுதல் இலகுவாக நடப்பது. போர்ட்போலியோ நிதித் துறையில், தனிநபர் அல்லது ஒரு நிறுவனத்தின் பங்குகள், பத்திரங்கள், ரியல் எஸ்டே் உள்ளிட்ட சொத்துகள், நிதி முதலீடுகளின் தொகுப்பு போர்ட்போலியோ எனப்படும். இத்தகைய போர்ட்போலியோவை நிர்வகிக்க பி.எம்.எஸ்., நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒருவர் பி.எம்.எஸ்., திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய வேண்டும் எனில், குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் தேவைப்படும்.