உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மசாலா பொருட்கள் ஏற்றுமதி; முதல் காலாண்டில் 6 சதவிகிதம் அதிகரிப்பு

மசாலா பொருட்கள் ஏற்றுமதி; முதல் காலாண்டில் 6 சதவிகிதம் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மசாலா பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய மசாலாவுக்கு உலகெங்கும் கிடைக்கும் வரவேற்பே இதற்கு காரணம்.கடந்த ஏப்ரல், ஜூனில், கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்க்கு மசாலா பொருட்கள் ஏற்றுமதி நடந்திருக்கிறது. இது 2024 ஏப்ரல் - ஜூனில் நடந்த 9,200 கோடி ரூபாய் ஏற்றுமதியை விட 6 சதவீதம் அதிகம்.https://x.com/dinamalarweb/status/1947108198546370613

ஒட்டுமொத்த நிதியாண்டில், மசாலா பொருட்கள் ஏற்றுமதி சராசரியாக 6 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய மசாலா பொருட்களை அதிக இறக்குமதி செய்வதில் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. சீனா முதலிடம் வகிக்கிறது. உலக அளவில் மசாலா பொருட்கள் உற்பத்தி, நுகர்வு, ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.மசாலா பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பில், மிளகாய், விதை மசாலாக்கள், மசாலா எண்ணெய் ஆகியவை முக்கிய காரணமாகின. ஜூலை முதல் அமெரிக்க வரி விதிப்புகள் குறித்த அச்சத்தால், முன்கூட்டியே அதிக ஏற்றுமதி நடந்தது. குறிப்பாக, மதிப்பு கூட்டப்பட்ட மசாலா பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இமானுவேல் நம்புசெரில் தலைவர், அகில இந்திய மசாலா ஏற்றுமதியாளர் அமைப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை