உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹசாரே சட்டம் இயற்ற முடியாது: பிரணாப் முகர்ஜி

ஹசாரே சட்டம் இயற்ற முடியாது: பிரணாப் முகர்ஜி

புதுடில்லி: அன்னா ஹசாரே சட்டம் இயற்ற முடியாது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். மேலும் அவர், பார்லிமென்டில் தான் சட்டம் இயற்ற முடியும். அன்னா ஹசாரேவால் முடியாது எனவும் கூறினார். இதனிடையே, ஹசாரேவின் போராட்டம் சட்டவிரோதமானது என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், ஹசாரேவின் போராட்டத்துக்கு இந்தியா முழுவதும் நிதி உதவி செய்வது யார். லோக் பால் மசோதா தொடர்பாக ஹசாரேவுக்கும், நிலைக்குழுவுக்கு இடையே தான் பேச்சுவார்த்தை நடந்தது. போராட்டம் நடத்த உரிமை உள்ளது என்பதை, தாங்கள் விரும்பும் இடத்தில் போராட்டம் நடத்தலாம் என்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. போராட்டம் நடத்த உரிமை உள்ள போது, அதற்கான நிபந்தனைகளையும் நிறைவேற்ற வேண்டும் என கூறினார். மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், ஹசாரேவின் கடிதம் பிரதமரின் நேர்மையை சந்தேகப்பட வைப்பதாக உள்ளது. ஹசாரே போலீசாரை குறை கூறுகிறார். ஆனால் அவருடன் இருக்கும் கிரண் பேடி போலீசாக பணியாற்றியவர். லோக் பால் மசோதா முறைகேடுகளை ஒழிக்கும் என மக்களிடம் தவறான தகவல் பரப்பப்படுகிறது என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி