உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லாபமும் இல்லை; விற்பனையும் இல்லை: கேரளாவில் 2,500 கள்ளுக்கடைகள் மூடல்

லாபமும் இல்லை; விற்பனையும் இல்லை: கேரளாவில் 2,500 கள்ளுக்கடைகள் மூடல்

கொல்லம்: கேரளாவில், கள் விற்பனை டல்லடித்து காணப்படும், 2,500 கள்ளுக்கடைகள் மூடப்பட்டன.

கேரளாவில், திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை, பல இடங்களில், 5 ஆயிரத்து, 200 கள்ளுக்கடைகள், மாநில அரசின் அனுமதி பெற்று செயல்படுகின்றன. இங்கு வீரியமிக்க கள், விற்பனை செய்யப்படுகிறது. இந்த கள் குடித்து, மலப்புரம் மாவட்டத்தில், கடந்தாண்டு மூன்று இடங்களில், அடுத்தடுத்து சிலர் இறந்தனர். இத்துயர சம்பவத்திற்குக் காரணமாக, கள் பரிசோதிக்கப்பட்டதில், அதில் அதிக அளவுக்கு, எரிசாராயம் கலக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இது தொடர்பாக, சிலரை போலீசார் கைது செய்ததோடு, பல கள்ளுக்கடைகள் மீது, நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இத்துயர சம்பவத்தை தொடர்ந்து, கள்ளில் அதிகளவு எரிசாராயம் கலக்கவும், போலி கள் விற்பனைக்கும் மாநில அரசு தடை விதித்தது.

இதையடுத்து, மாநில கலால் துறையினர், அடிக்கடி ரெய்டு நடத்தி, நிலைமையை கண்காணித்து வருகின்றனர். கள்ளில் எரிசாராயத்தின் அளவு, 8.1 சதவீதத்திற்கு அதிகமானால், கலால் துறையினரின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். ஆனால், அதை விட அதிகளவு இருந்தால் தான், கள்ளில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் 'கிக்' இருக்கும். போதிய 'கிக்' இல்லாததால், கள் குடிக்க முன்போல் வாடிக்கையாளர்கள் கள்ளுக் கடைகளை தேடி செல்வதில்லை. அவர்களில் பலரும் மதுபான பார்களை நாடிச் செல்கின்றனர். இதனால் கள்ளுக்கடைகளில் வியாபாரம் 'டல்'லடிக்க ஆரம்பித்து, விற்பனையுமின்றி, லாபமும் இன்றி பல கடைகள் மூடப்பட்டன. இவ்வாறு மாநிலத்தில் மொத்தமுள்ள, 5 ஆயிரத்து, 200 கடைகளில், தற்போது, 2 ஆயிரத்து, 500 கடைகள் மூடியே கிடக்கின்றன. கொல்லம் மாவட்டத்தில் மட்டும், 233 கடைகளில், தற்போது, 21 கடைகள் மட்டுமே செயல்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை