உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீருடை விவகாரம் : மோகன் லாலிடம் விளக்கம் கேட்கிறது ராணுவம்

சீருடை விவகாரம் : மோகன் லாலிடம் விளக்கம் கேட்கிறது ராணுவம்

புதுடில்லி: ராணுவ சீருடைய தவறான மு‌றையில் பயன்படுத்தியது குறித்து மலையாள நடிகர் மோகன்லாலிடம் பிராந்திய ராணுவம் விளக்கம் கோரியுள்ளது. நாட்டில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்குபவர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் கவுரமிக்‌க பதவிகள் வழங்கி வருவது வழக்கம. அதன்படி 83-ம் ஆண்டில் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பை‌யை வென்ற கபில் தேவ், மற்றும் 2008-ல் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கம் வென்ற அபினவ்பிந்த்‌ரே, 2011-ல் கிரிக்‌கெட் போட்டியில் உலககோப்பை வென்ற கேப்டன் தோனி ஆகியோருக்கு மேற்கண்ட பதவிகளை வழங்கியது. அதே போல் திரைப்படத்துறையிலும் புகழ்‌பெற்று விளங்கி வரும் மலையாள நடிகர் மோகன்லாலுக்கும் இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சுற்றுலாதலங்களை மேம்படுத்தும் விளம்பரம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் நடித்துள்ள மோகன்லால் ராணுவ சீருடையை தவறான நோக்கத்தில் பயன்படுத்தப்படிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து பிராந்திய ராணுவமும் நடிகர் மோகன்லாலிடம் விளக்கம் கோரியுள்ளது.

இதுகுறித்து மோகன்லாலிடம் கேட்ட போது காந்தகார் படத்தில் நடித்த போது வேடத்திற்கு ஏற்றவாறு மட்டுமே ராணுவ உடையை பயன்படுத்தியுள்ளதாகவும் மற்றவர்கள் கூறுவதை போன்று ராணுவ உடையை தவறாக பயன்படுத்த வில்லை என்றும் இது தான் உண்மை நிலவரம் எனவும் ‌கேரள அரசின் விளம்பர படத்தில் நடித்தததற்காக சிறப்பு ஊதியம் எதுவும் பெறவும் இல்லை என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ