உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "2ஜி ஊழல் குறித்து விசாரிக்கும் ஜே.பி.சி.,யின் பதவிக்காலம் நீட்டிப்பு

"2ஜி ஊழல் குறித்து விசாரிக்கும் ஜே.பி.சி.,யின் பதவிக்காலம் நீட்டிப்பு

புதுடில்லி: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரித்துவரும் பார்லிமென்ட் கூட்டுக் குழுவின்(ஜே.பி.சி.,) பதவிக் காலம், அடுத்தாண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் எனஎதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதன் காரணமாக, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரே பாதிக்கப்பட்டது.குறிப்பாக, இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள்பிடிவாதம் பிடித்ததால், கடைசியில் மத்தியஅரசு இறங்கிவந்து பார்லிமென்ட் கூட்டுக்குழுவை கடந்த மார்ச் 4ம் தேதி அமைத்தது.இக்குழுவில், லோக்சபாவில் இருந்து, 20பேரும், ராஜ்யசபாவில் இருந்து, 10 பேரும் இடம்பெற்றனர். குழுவின் தலைவராக பி.சி.சாக்கோநியமிக்கப்பட்டார். இக்குழு, ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணைநடத்தி, இம்மாதம் 8ம் தேதிக்குள் அறிக்கைஅளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.இந்நிலையில், இன்னும் ஒரு சில நாட்களேஇருப்பதால், தங்களால் விசாரணை நடத்தமுடியவில்லை. எனவே, இதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் என, குழுவின் தலைவர்சாக்கோ, லோக்சபாவில் தீர்மானம்கொண்டு வந்தார்.அறிக்கை அளிக்கும் காலத்தை அடுத்தாண்டுபார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரைநீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.பின்னர் இந்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம்நிறைவேறியது.இக்குழு இதுவரை அமலாக்கத்துறை அதிகாரிகள், சி.பி.ஐ., மற்றும் சில முன்னாள் தொலைத்தொடர்பு செயலர்கள் மட்டுமே விசாரித்துள்ளது.இன்னும் தொலைத்தொடர்பு துறையின் முன்னாள் அதிகாரிகள், டிராய்யின் முன்னாள் தலைவர், முன்னாள் அட்டர்ஜி ஜெனரல் சொலிசொராப்ஜி மற்றும் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்களிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை