ஹசாரே ஆதரவைகோரவில்லை:பா.ஜ., விளக்கம்
புதுடில்லி:அத்வானியின் ஊழலுக்கு எதிரான ரத யாத்திரை திட்டத்துக்கு ஹசாரேவின் ஆதரவை கோரவில்லை என, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.பா.ஜ., தலைவர் அத்வானி, ஊழலுக்கு எதிராக அடுத்த மாதம் ரதயாத்திரை நடத்த உள்ளார். 'அத்வானியின் ரதயாத்திரை போலியானது' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.இது குறித்து பா.ஜ., தகவல் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கார் குறிப்பிடுகையில், 'ரத யாத்திரையை பற்றி கருத்து சொல்வதற்கு ஹசாரேவுக்கு உரிமை உள்ளது. ரத யாத்திரைக்கு மக்கள் ஆதரவளிப்பதும் ஆதரவளிக்காததும் அவரவர் விருப்பம். ஆனால், நாங்கள் அத்வானியின் ரத யாத்திரைக்கு ஆதரவளிக்கும் படி ஹசாரேவை கேட்கவில்லை. அன்னா ஹசாரே உள்ளிட்ட பலரது ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்துள்ளது. ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கோடு தான் அத்வானி ரதயாத்திரை நடத்துகிறார்' என்றார்.