உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சர்வதேச எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.இது குறித்து ராணுவ கமாண்டரின் 268 வது பிரிவின் பிரிகிடியர் குல்கர்னி கூறியது, காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கிரான் செக்டரின் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு பயங்கரவாதிகள் ஊடுருவல் நடப்பதாக கிடைத்த உளவுதகவலையடுத்து அங்கு ராணுவம், பாதுகாப்பு படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சில பயங்கரவாதிகள் சர்வதேச எல்லை தாண்டி ஊடுருவ முயன்றதையடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்