உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நெட் தேர்வு வினாத்தாள் ரூ.5,000: சமூக ஊடகங்களில் கூவி விற்ற அவலம்

நெட் தேர்வு வினாத்தாள் ரூ.5,000: சமூக ஊடகங்களில் கூவி விற்ற அவலம்

புதுடில்லி: 'யு.ஜி.சி., நெட்' தேர்வுக்கான வினாத்தாள், 'டார்க் நெட்' வாயிலாக வெளியானதாகவும், 'டெலிகிராம்' தகவல் பரிமாற்ற ஊடகம் வாயிலாக, 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.கல்லுாரி உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேசிய தகுதித் தேர்வான, யு.ஜி.சி., நெட் தேர்வுகளை என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. நாடு முழுதும் கடந்த 18ம் தேதி நடந்த யு.ஜி.சி., நெட் தேர்வுக்கு 11 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். தேர்வு முடிந்த மறுநாளான 19ம் தேதி, தேர்வுக்கு முன் வினாத்தாள் வெளியான விபரம் தெரியவந்தது. இது தொடர்பான, 'லிங்க்'குகள், சமூக ஊடக தகவல் பரிமாற்றங்கள், 'ஸ்கிரீன்ஷாட்'களை மத்திய சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றை, மத்திய கல்வி அமைச்சகத்தில் அவர்கள் சமர்ப்பித்தனர்.தேர்வு வினாத்தாளும், முன்னதாக வெளியான வினாத்தாளும் ஒத்துப்போவதை கல்வி அமைச்சகம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து நடந்து முடிந்த யு.ஜி.சி., நெட் தேர்வை, தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.இந்நிலையில், தேர்வுக்கு 48 மணி நேரம் முன்னதாக, 'டார்க் வெப்'பில் வினாத்தாள் வெளியானதாகவும், சில சமூக ஊடகக் குழுக்களில் வினாத்தாள் 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் சி.பி.ஐ., தரப்பு தெரிவிக்கிறது. அதோடு, வினாத்தாள் விற்பனையின் மையப்புள்ளியாக, டெலிகிராம் தகவல் பரிமாற்ற செயலி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த செயலியில் உருவாக்கப்பட்ட பல புதிய குழுக்கள் வாயிலாக, தேர்வுக்கு முந்தைய நாளில் வினாத்தாள் 10,000 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக, வினாத்தாள் வடிவமைத்த குழுவினர், நெட் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கும் பயிற்சி மையங்களிலும் சி.பி.ஐ., விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு பல்கலை வளாகங்களிலும் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.'வாட்ஸாப், டெலிகிராம்' செயலிகளில் 5,000 ரூபாய்க்கு வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டது குறித்து, தேர்வுக்கு சில நாட்கள் முன்பாகவே நாங்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, லக்னோ பல்கலை மாணவர்கள் தெரிவித்தனர்.ஏற்கனவே இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'நெட்' தேர்வு விவகாரம் மத்திய அரசுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

S Sivakumar
ஜூன் 22, 2024 18:51

படிப்பது பணம் சம்பாதிக்க என்ற நிலையே இப்படி விலை போய் விட்டது கல்வி. மாற்று யோசனை இல்லை என்றால் காலப்போக்கில் கல்வியறிவு பல பேருக்கு பணம் செய்யும் ஆயுதம் ஆக்கி விடும். அது பல பல பேருக்கு ஆபத்தாக முடியும்


ஆரூர் ரங்
ஜூன் 22, 2024 11:07

பெற்றோர் மாணவர்களின் பேராசை திருடர்களை உருவாக்குகிறது. சமூகத்தில் நேர்மையுமா ஒழுக்கமும் குறைந்ததாலேயே இது போன்ற குற்றங்கள் நடக்கின்றன.


Sampath Kumar
ஜூன் 22, 2024 10:44

நீட் நெட் போன்ற தேர்வுகள் நடத்தும் வடக்கன் குரூப்களை ஒழித்து கட்டவேண்டும் உ.பி. பீகார், ராஜஸ்தான் , ஹாய்நவில் நிறைந்து உள்ள சமுக விரோதிகள் தான் இந்த காரியத்தை செய்கிந்தார்கள் இதனால் தான் வடக்கன் அதிகமாக பாஸ் செய்து வருகிண்டர்ன் ரயில்வே குறை, இந்திய ஆட்சி துறை போலீஸ் குறை போன்ற இது துறைகளிலும் வடக்கன் மட்டுமே அதிகமாக பாஸ் இது சமீபகாலமாக் அதிகரித்து வரு கின்றது சார்ய சாவைவிட இது வும் மோசமான ஓன்று மத்திய அரசு தான் இதற்க்கு தீர்வு காண வேண்டும்


ஆரூர் ரங்
ஜூன் 22, 2024 12:09

இங்கும் தேனி மருத்துவக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கு முன் ஆள்மாறாட்டம் மூலம்( அரசு மருத்துவரின் மகன்) மாணவன் சேர்ந்தான் என்பது செய்தி . இன்னும் பலர் பிடிபடாமல் இருக்கலாம்.


ஆரூர் ரங்
ஜூன் 22, 2024 12:10

சமச்சீர் கல்வியின் பயனாலா கள்ளக்குறிச்சிகள் உருவாகின்றன? சேலம் தர்மபுரி நாமக்கல் உறைவிடப் பள்ளிகளில் ஒட்டு மொத்த மாக காப்பியடித்து அரசு மருத்துவ என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்ததை மறைக்க முடியாது. பொதுமக்களிடையே கூட ஒழுக்கக் கேடு ஏற்பட்டுள்ளது தான் முறைகேடுகள் நடக்கக் காரணம்.


அப்புசாமி
ஜூன் 22, 2024 08:21

சாராயம் காய்ச்சறது முதல்வருக்கு தெரியாது. வினாத்தாள் கசியறது கல்வி அமைச்சருக்கு தெரியாது.


அனந்தராமன்
ஜூன் 22, 2024 07:18

ஆளும் பாஜகவுக்கு இப்படியெல்லாம் சதி முலம் எதிர்க் கட்சிகள் மட்டுமே செயல் பசுமைக் பீகாரிலும் கர்நாடகாவிலும் இதில் முக்கியமாக செயல்படுபவர்கள்


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 22, 2024 03:50

குறுக்கு வழியில் வெற்றி அடையவேண்டும் என்ற கேவலமான எண்ணம் இளைஞ்சர்கள் கொண்டுள்ளது வருத்தமளிக்கிறது.


Priyan Vadanad
ஜூன் 22, 2024 03:24

முந்தைய நாட்களைப்போல இருந்தால் ஒரு ஊடகமும் இந்த செய்தியை வெளியிட்டிருக்காது. வழக்கம்போல மத்திய அரசு தலைவர் இப்போதும் மவுனவிரதயோகா செய்துகொண்டிருப்பார்.


Priyan Vadanad
ஜூன் 22, 2024 03:20

தினமலரா இந்த செய்தியை வெளியிடுவது? ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது மத்திய அரசின் தீதீதீவிர பக்தர்கள் இந்த பக்கமே வரமாட்டார்கள். அல்லது இதற்கும் காங்கிரசையும் திமுகவையும் ராகுலையும் காரணம் காட்டி குதறிவிடுவார்கள்


Anantharaman
ஜூன் 22, 2024 07:21

இந்தக் கட்சிகள் தேச விருதுகள். நாட்டுக்கு நல்லது செய்யாது இது போன்ற கேவலம் செய்ய,வேறு யாருளர்?


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி