உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்கள்: கேரள பெண் மீட்பு

இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்கள்: கேரள பெண் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் இன்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்டார். இவர் பத்திரமாக நாடு திரும்பினார். அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. சமீபத்தில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா பகுதியில் சென்ற, இஸ்ரேலுக்கு சொந்தமான 'எம்.சி.எஸ்.ஏரிஸ்' என்ற சரக்கு கப்பலை, ஈரான் படை சிறை பிடித்தது. இந்த கப்பலில் இருப்பவர்களில், 17 பேர் இந்தியர்கள் என கண்டுப்பிடிக்கப்பட்டது. சரக்கு கப்பலில் உள்ள 17 இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் இன்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்டார். இவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். இவர் இன்று பத்திரமாக நாடு திரும்பினார். அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெளியுறவுத்துறை

‛‛ கப்பலில் மீதமுள்ள 16 இந்திய பணியாளர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை விரைவில் மீட்போம்'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Easwar Kamal
ஏப் 19, 2024 00:01

மலையாளிகளில் ஆம்பளைகத்தான் ஏதோ அரைகுறையா படிச்சவுடனே ரெண்டு கைலி சட்டை எடுத்துக்கிட்டு கிளம்பிரானுவ இப்போ பொம்பிளைகளும் கிளம்பியாச்சு போல


Bahurudeen Ali Ahamed
ஏப் 18, 2024 19:47

எந்த அரசாங்கமாக இருந்தாலும் மீட்பு நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள், இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை அது அரசாங்கத்தின் கடமை என்ன ஒன்னு சொந்த நாட்டு மக்களை இஸ்ரேலில் இருந்து மீட்கும் போது நம் அரசாங்கத்திடம் சொந்தமாக விமானம் இல்லாமல் போய்விட்டது, தனியாரிடம் வாடகைக்கு எடுக்க வேண்டிய துரதிஷ்ட நிலைமை வந்தது


Bye Pass
ஏப் 18, 2024 20:11

இஸ்ரேல் பெயரை சொன்னாலே வயித்தில புளி கரைத்த மாதிரி பீலிங் வருதே


anand
ஏப் 18, 2024 20:43

இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது என்ன நடவடிக்கை எடுத்தானுக ?


panneer selvam
ஏப் 18, 2024 22:56

Indians are fine at Israel and no one wants to return Tel Aviv airport is functioning for commercial flights and hence no need to send any aircraft So do not worry Modi knows how to save Indians either inside or outside of India


hari
ஏப் 18, 2024 18:10

we trust our EAM Mr. jayshankar.


P. VENKATESH RAJA
ஏப் 18, 2024 18:09

விரைவில் 17 பேரும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 18, 2024 17:51

கடலுக்குள் பஸ் விட்டு கேரளப்பெண்ணை காத்த திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு ஓட்டு போடுவோம்


Duruvesan
ஏப் 18, 2024 17:40

ஆக விடியலின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி அடிமைகளே மீனவர்களுக்கு பிஜேபி துரோகம் னு விடியல் சொன்னது மெய்யா யோசியுங்கள்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ