உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 22 வயசில் என்ன ஒரு வில்லத்தனம்; பக்கா கள்ளநோட்டு அச்சிட்ட பஞ்சாப் எமகாதகர்கள் கைது

22 வயசில் என்ன ஒரு வில்லத்தனம்; பக்கா கள்ளநோட்டு அச்சிட்ட பஞ்சாப் எமகாதகர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரோஸ்பூர் : பஞ்சாபில் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ள நோட்டு

பெரோஸ்பூர் உள்ள ஜைரா டவுன் பகுதியைச் சேர்ந்த 22 வயது வாலிபர் ஜஸ்கரன் சிங். இவர், தனது வீட்டில் கள்ளநோட்டுகளை அச்சிட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று சோதனை நடத்திய போது, அங்கு கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டது தெரிய வந்தது. கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.100, ரூ.200, ரூ.500 என ரூ.3.24 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு புறம் மட்டும் ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட தாள்கள் இருந்தன. ரூபாய் நோட்டு அச்சிட்டு கட்டிங் செய்யப்படாத ஏ4 தாள்களும் ஏராளம் இருந்தன. பிரின்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் வருவதை கண்டதும், ஜஸ்கரன் சிங் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பிச் சென்றான். அவனை போலீசாரும் தீவிரமாக தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில், கடந்த ஆக.,2ம் தேதி ஜஸ்கரன் சிங்கை கைது செய்த போலீசார், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆகாஷ்தீப், 22, என்ற நபரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சிறையில் அடைப்பு

இது குறித்து போலீசார் கூறுகையில், 'கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயற்சித்த போது சிக்கிக் கொண்டனர். பின்னர், பழக்கடை போன்ற சிறுசிறு கடைகளில் கள்ளநோட்டுக்களை மாற்றியுள்ளனர். சூதாடும் இடத்தில் நோட்டுக்களை கொடுத்துள்ளார். அப்போது கள்ளநோட்டு என்று அங்கிருந்த சிலர் கண்டுபிடித்து தகராறு செய்துள்ளனர். இதில் தான் விவகாரம், போலீசுக்கு வந்து விட்டது.கள்ளநோட்டுக்களை அச்சடிப்பதற்காக, அஜித் எனும் பப்ஜி கேம் விளையாடுபவரை பயன்படுத்தி, பிரிண்ட்டிங் மெஷின், தரமுள்ள ஏ4 பேப்பர் உள்ளிட்டவற்றை வாங்கி வரச் செய்துள்ளார். தற்போது, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

TSRSethu
ஆக 13, 2024 13:01

500 ரூபாய் நோட்டுக்களை நிறுத்தலாம். அதிகபட்சம் ₹100 போதுமே. ஆன்லைன் மற்றும் பேங்க பரிவர்த்தனை அதிகரிக்கட்டும். இப்பவே அனைவரும் phone pay Gpay Paytm மாறியுள்ளனர். பண மதிப்பிழப்பு அல்லது நிறுத்துவதால் எந்த பாதிப்பும் வராது.


Kumar Kumzi
ஆக 12, 2024 16:06

அரசாங்கம் அறிவித்த சிறுகுறு தொழில்களில் இது மிகவும் லாபகரமான தொழிலில் நம்மூர் கள்ளக்குறிச்சி கைத்தொழில் போல


Vijay D Ratnam
ஆக 12, 2024 14:43

கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடுவது, சிலர் கைது செய்யப்படுவது என்ற செய்திகள் அவ்வப்போது வருகிறது. என்ன செய்துவிடப்போகிறார்கள். கைது செய்வார்கள். அதுக்கு மேல என்ன செஞ்சுடுவாங்க. வக்கீல் இருக்கார், ஜாமின்ல வெளியே வரலாம். பொறவு கீழ்கோர்ட், விசாரணை, வாய்தா, பெயில், மேல்முறையீடு ஹைகோர்ட் வாய்தா சாட்சிகள் பல்டி என்று எவ்ளோ சமாச்சாரம் இருக்குது. என்கவுன்ட்டர் பண்ணலாம், இந்த மனித உரிமை மாட்டு உரிமைன்னு நாலஞ்சி பெரு கெளம்பிடுவானுங்க. தண்டனை கடுமையாக இல்லாத பட்சத்தில் இதை குறைக்கவே முடியாது. நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கும் இந்த குற்றவாளிகளுக்கு என்ன பெரிதாக தண்டனை கொடுத்துவிடப்போகிறார்கள். இவர்களால் பெரிதும் பாதிப்படைவது ஏழை நடுத்தர மக்கள், விபரம் அறியாத அப்பாவிகள். சமீபத்தில் மாம்பலத்தில் இளநீர் விற்கும் வயதான தம்பதிகளிடம் எவனோ 500 ரூபாய் ஃபேக் தாளை கொடுத்திருக்கிறான். பாவம் அந்த தம்பதிகள் புலம்பி தவித்தார்கள். அவர்களிடம் நீங்கள் காவல்நிலையத்தில் புகார் செய்யுங்கள் அவர்கள் குற்றவாளியை கண்டுபிடித்து உங்களுக்கு நல்லபடியாக பணத்தை மீட்டு தருவார்கள் என்று சொல்ல முடியுமா. கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டால் தூக்குத்தண்டனை என்று சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தினால் இந்த செயல் பெருமளவுக்கு குறையும். சிறிய அளவில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டால் குற்றவாளியின் ஒரு கிட்னி, இரண்டு கண்கள் தானம் பெறப்பட்டு பின் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கலாம்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 12, 2024 13:42

பஞ்சாபில் குடும்பத்திற்கு ஒருவர் நாட்டிற்கு சேவை செய்யும் இராணுவ வீரராக இருப்பார்கள் ஒருவர் விவசாயியாக இருப்பார்கள் ஒருவர் வெளிநாட்டில் பணிக்கு இருப்பார்கள் என்று தான் முன்னர் கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் இப்போது குடிகாரர்கள் தேசவிரோத தீவிர வாதிகள் போதைப்பொருள் அடிமைகள் என்று மாறி அதில் கள்ள நோட்டு சூதாட்டம் சேர்ந்து விட்டது. எல்லாம் காலம் செய்யும் மாயம்


Swaminathan L
ஆக 12, 2024 13:22

இந்த விஷயத்தில் சுய தொழில் முனைவு என்பது இப்படித்தான் ஏ4 பேப்பரில் அச்சடித்து மாட்ட வைத்து விடும்.


jss
ஆக 12, 2024 13:02

This is jujubi. The previous FM sold note printing machines to Pakistan to print illegal and counterfeit notes. who is diabolical, now you decide yourselves


chennai sivakumar
ஆக 12, 2024 13:18

Super sir


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை