உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "சுயமரியாதையை சீண்டினால் பதிலடி நிச்சயம்": ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

"சுயமரியாதையை சீண்டினால் பதிலடி நிச்சயம்": ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

புதுடில்லி: எங்களது சுயமரியாதையை யாராவது சீண்டினால் பதிலடி நிச்சயம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது: சீனாவில் உள்ள சில இடங்களின் பெயரை இந்தியா மாற்றினால், அது நம்முடையதாக மாறுமா?. பெயர்களை மாற்றுவதால் எதையும் சாதிக்க முடியாது என்பதை நம் அண்டை நாட்டின் இடம் சொல்ல விரும்புகிறேன். சீனா இந்த தவறை செய்யக்கூடாது. இது போன்ற நடவடிக்கைகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை பாதிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

பதிலடி நிச்சயம்

இந்தியா தனது அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவைப் பேண விரும்புகிறது, ஆனால் நமது சுயமரியாதையை யாராவது சீண்டினால் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை உள்ளது. எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பா.ஜ., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் நிலத்தை யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Lion Drsekar
ஏப் 10, 2024 14:04

பத்து வருடம் ஆகிவிட்டது ? வந்தே மாதரம்


அப்புசாமி
ஏப் 10, 2024 08:02

சீனாவிலிருந்து இறக்குமதி மட்டும் ஓஹோ ஓஹோன்னு போய்க்கிட்டிருக்கு ஹைன்..


Pundai mavan
ஏப் 10, 2024 07:29

தேர்தல் வந்தால் வீரம் தெறிக்கும் மத்த நாட்களில் சீனா பெயரை சொல்ல பயந்து நடுங்கும் வீரமா பீ ஜெ பீ


hari
ஏப் 10, 2024 05:59

வெளிநாட்டில் வேலை செய்யாமல். நம் நாட்டில் வேலை செய்வதே சுயமரியாதை ஆகும்... புரிஞ்சா சரி


Easwar Kamal
ஏப் 09, 2024 20:10

ஐயா சுய மரியாதை என்றல் என்னங்கய்யா? நமக்கு தெரிஞ்சது எல்லாம் கட்டுப்படி வைத்யம்தானுங்க


தஞ்சை மன்னர்
ஏப் 09, 2024 19:25

அவன் அப்பப்ப அப்ப்பா சீண்டிக்கொண்டே தான் இருக்கான் நாமதான் ஹீ ஹீ


sundarsvpr
ஏப் 09, 2024 18:17

அரசியலில் நேர்மை உதவாது ஆனால் அரசு நிர்வாகத்தில் நேர்மை வேண்டும் ஜவஹர் நிர்வாகத்தில் சீனாவிடம் சில இடங்களை இழந்தோம் என்ன விபரம் சொல்லப்பட்டது உபயோகம் இல்லாத இடம் என்று ஜவகர் கூறினார் தற்போதைய அரசு அவ்வாறு கூறாது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி