உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மங்களூரு விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்

மங்களூரு விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்

மங்களூரு : மங்களூரு விமான நிலையத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.மங்களூரு பஜ்பே விமான நிலையத்திற்கு, கடந்த 6ம் தேதி நள்ளிரவு, துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. பயணியரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது உடைமைக்குள் மறைத்து வைத்து, தங்கம் கடத்தி வந்த, ஒரு பயணி கைது செய்யப்பட்டார். அவர் கேரளாவின் காசர்கோடு மொக்ரால் புத்துாரின் ஆசிப், 40, என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து 578 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்மதிப்பு 40 லட்சத்து 40 ஆயிரத்து 220 ரூபாய்.துபாயில் வேலை செய்யும் ஆசிப், அங்கிருந்து தங்கம் கடத்தியது தெரிந்தது. அவரிடம் பஜ்பே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை