உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 கிலோ போதை பவுடர் பஞ்சாபில் சிக்கியது: ஒருவர் கைது

5 கிலோ போதை பவுடர் பஞ்சாபில் சிக்கியது: ஒருவர் கைது

சண்டிகர்:போதைப் பொருள் கடத்தி வந்தவரை கைது செய்த பஞ்சாப் போலீஸ், ஒரு கிலோ ஹெராயின் மற்றும் 4 கிலோ மெத்தாம் பெட்டமைன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக பஞ்சாப் மாநிலத்துக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.இவற்றில், 'ஐஸ்' அல்லது 'கிரிஸ்டல் மெத்' என அழைக்கப்படும் மெத்தம்பெட்டமைன், போதைப் பழக்கத்துக்கு மிகவும் அடிமையாக்கும் போதை வஸ்து.இந்தப் போதைப் பொருள் கடத்தல் கும்பலை கூண்டோடு கைது செய்ய பஞ்சாப் மாநில உளவுத்துறை திட்டமிட்டு தீவிர சோதனை நடத்தியது. அமிர்தசரஸ் அருகே கக்கர் கிராமத்தில் வசிக்கும் அவதார் சிங் என்பவரைக் கைது செய்தது. அவரிடம் இருந்து 4 கிலோ ஐஸ் மற்றும் 1 கிலோ ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமிர்தசரஸில் உள்ள மாநில சிறப்புப் பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை